ஜனவரி 17, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரிலிருந்து, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் (Mumbai - Ahmedabad) நகரை இணைக்கும் வகையில் மத்திய அரசு புல்லட் இரயில் சேவையை அறிவித்திருந்தது. முற்றிலும் புதிய இரயில் வழித்தடத்தில் 508 கிலோமீட்டர் அளவிற்கு ஜப்பான் (Japan) நாட்டில் இயங்கும் புல்லட் இரயில் இந்தியாவில் இயக்கப்பட உள்ளது. இதற்காக ஜப்பானும் - இந்திய அரசும் தங்களுக்குள் நட்புறவை மேலும் வளர்க்கும் பொருட்டு ஒப்பந்தத்தை பரிமாறி, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
508 கி.மீ தூரத்திற்கு சேவை: இதனைத்தொடர்ந்து, மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் (Bullet Train) சேவைக்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்ற வருகின்றன. தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், 508 கிலோ மீட்டர் வழித்தடத்திற்கு மின்சார சேவை வழங்கும் பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் மத்திய அரசால் டெண்டர் விடப்பட்டிருந்தது. Akshay Kumar Wife Study: "கற்பதற்கு வயது இல்லை" மனைவியின் ஆசையை அன்போடு நிறைவேற்றிய அக்சய் குமார்: பாராட்டுகளை குவிக்கும் நட்சத்திர தம்பதி.!
8 மணிநேர பயணத்திற்கு விடுதலை: பல நிறுவனங்கள் இதற்காக போட்டியிட்டுக் கொண்ட நிலையில், எல்&டி (Larsen & Toubro) நிறுவனம் ரூபாய் 15,000 கோடி மதிப்பீட்டில் மின்சார சேவை வழங்கும் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த புள்ளிகளை கோரி அதில் வெற்றி அடைந்துள்ளது. மும்பையில் இருந்து அகமதாபாத் செல்வதற்கு சாதாரணமாக சாலை வழி போக்குவரத்தில் எட்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஆகும். இரயில் பயணத்திலும் இதே நிலைமைதான்.
இரண்டரை மணிநேரத்தில் 500 கி.மீ பயணிக்கலாம்: புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், 508 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 2 மணி நேரத்தில் கடந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு புல்லட் ரயில் 250 கிலோமீட்டர் மேற்பட்ட வேகத்தில் பயணம் செய்யக் கூடியது என்பதால், 500 கிலோ மீட்டரை வெறும் 2 மணி நேரங்களில் புல்லட் ரயில் எளிதில் கடந்துவிடும். முதற்கட்டமாக மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவை தொடங்கி வெற்றியடைந்துவிடும் பட்சத்தில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் சேவை விரைந்து அடுத்தடுத்த சேவைகள் அறிமுகம் செய்யப்படும்.
பிற புல்லட் இரயில் வழித்தடங்கள்: விரைவில் டெல்லி - அகமதாபாத், மும்பை - நாக்பூர், மும்பை - ஹைதராபாத், சென்னை - மைசூர், டெல்லி - அமிர்தசரஸ், வாரணாசி - ஹவுரா, டெல்லி மும்பை, மும்பை - சென்னை, சென்னை - கொல்கத்தா, டெல்லி - கொல்கத்தா, மும்பை - கொல்கத்தா, டெல்லி - சென்னை புல்லட் இரயில் சேவை எதிர்காலத்தில் வழங்கப்படும். இவற்றில் டெல்லி - சென்னை வழித்தடம் மட்டுமே நீண்ட தூரம் கொண்ட புல்லட் இரயில் சேவை வழித்தடம் ஆகும்.