அக்டோபர் 26, சென்னை (Chennai News): பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் சென்னை திரும்பியதும் தமிழக அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருவரையும் தனது இல்லத்துக்கு அழைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் மதிப்புள்ள உயரிய ஊக்கத்தொகையையும் வழங்கி பாராட்டினார். தங்கம் வென்ற வீரர்கள் கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் வைத்துள்ள கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றி தருவதாகவும் முதல்வர் உறுதியளித்தார். நாளைய வானிலை: சுத்து போடும் மேகங்கள்.. 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்ட மக்களே கவனம்.!

தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)