Paris Olympics 2024 (Photo Credit: Wikipedia)

மே 18, பாரிஸ் (Sports News): ஒலிம்பிக் தடகளப்போட்டிகள் 2024 (Paris Olympics 2024) பாரிஸில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தையும் போட்டிக்குழு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த போட்டியில் 32 க்கும் அதிகமான விளையாட்டுகளில், 329 போட்டிகளில், 10,500-க்கும் அதிகமான வீரர்கள் பல நாடுகளின் சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர். இதனால் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பாரிஸ் நகரமே விழாக்கோலம் காணவுள்ளது. 24 ஜூலை 2024 புதன்கிழமை கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்கும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள், 11 ஆகஸ்ட் 2024 வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 12ம் தேதி நிறைவு விழா மற்றும் பரிசளிப்புடன் ஒலிம்பிக் 2024 நிறைவு பெறுகிறது. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்சில் 33 விளையாட்டுகள் 339 பிரிவுகளாக நடத்தப்பட்டு இருந்தன. 206 உலக நாடுகள் சார்பில் 11,319 போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தனர். Hardik Pandya Banned: ஐபிஎல் 2025ல், ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாட தடை; அடுத்தடுத்த அபராததால் நடவடிக்கை.! 

ஒருவர் மட்டுமே உறங்கும் படுக்கை: இந்நிலையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக, விளையாட்டு வீரர்கள் பாலியல் (Anti-Sex Beds in Paris Olympics) உறவில் ஈடுபடாத வகையிலான படுக்கைகளை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் போட்டியாளர்களின் படுக்கைக்கு அடியில் இருந்து காண்டங்கள் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், தற்போது பல சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒலிம்பிக்ஸ் நிர்வாகம் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 10 ஆயிரம் பேர் தங்குவதற்கான தற்காலிக கிராமம் அங்கு அமைக்கப்படும் என்பதால், அறையில் போட்டியாளர்கள் ஒரு படுக்கையில் ஒருவர் மட்டுமே தங்கும் விதமாக படுக்கை அமைக்கப்பட்டு இருக்கிறது. Missing Actor Return Home: வீட்டிலிருந்து வெளியேறி மாயமானது ஏன்? - தொலைக்காட்சி நடிகரின் பதில்.. ஷாக்கான அதிகாரிகள்.! 

அசாதாரண சம்பவங்களை தடுக்க: இதனால் போட்டியாளர்கள் பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபடாமல் தடுக்க உதவும் என நிர்வாகம் கணித்துள்ளது. 2020 ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் இவ்வாறான படுக்கைகள் அமைப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதன் தரம் என்பது மெருகூட்டப்பட்டு இருக்கிறது. விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஓய்வுக்கு மட்டுமே அறைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு நடக்கும் சில அசாதாரண சம்பவங்களின் செயல்பாடுகளை தடுக்க இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இது மீண்டும் ஒலிம்பிக் மீதான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.