Jio Cinema App Logo (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 25, மும்பை (Mumbai): உலக செல்வந்தர்களில் கவனிக்கத்தக்கவரும், இந்திய செல்வந்தர்களில் முக்கியமானவருமான முகேஷ் அம்பானி (Muhesh Ambani) சார்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள், குறுந்தொடர்கள் ஆகியவற்றை கண்டு ரசிக்கும் வகையில் ஜியோ சினிமா (Jio Cinema OTT Platform) செயலி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஐபிஎல் (Watching Free on IPL ) சீசன்களிலும் ஜியோ சினிமா செயலின் முழுவீச்சிலான விளம்பர யுக்தியை பயன்படுத்தி, பயனர்களுக்கு இலவச சேவையையும் வழங்கி வருகிறது. இது மட்டுமல்லாது வார்னர் பிரதர்ஸ், என்பிசி யுனிவர்சல், ஈராஸ் நவ் ஆகிய பிற ஓடிடி செயலிகளுடன் ஒப்பந்த முறையில் வீடியோவை பார்க்கும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பயனர்கள் பணம் செலுத்தி வீடியோ பார்க்கும் வசதியும் அதில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. Alcohol & E Cigarette Habits on Children: புகை, இ-சிகிரெட் பழக்கத்தால் சீரழியும் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள்; உலக சுகாதார அமைப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.! 

Jio Cinema (Photo Credit: Wikipedia)

சேவைக்கட்டணம் அதிரடி குறைப்பு: இந்த நிலையில், தற்போது ஜியோ சினிமா நிறுவனம் இன்று முதல் தனது சேவைக்கான கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்கு குறைத்து அறிவித்திருக்கிறது. அதன்படி நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற பிற ஓடிடி தளங்களுக்கு போட்டித்தன்மையை ஏற்படுத்தும் வகையில், ஜியோ சினிமா தனது பிரீமியம் சேவையை மாதம் ரூ.29-க்கு வழங்கியுள்ளது. ஜியோ சினிமா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விளம்பரம் இல்லாத ஜியோ சினிமா செயலி பயன்பாடு மற்றும் வீடியோ பார்ப்பதற்கு மாதம் ரூபாய் 29 செலுத்திக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் நான்கு சாதனத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். JEE Main Exam 2024: ஜெஇஇ மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 100% மதிப்பெண் எடுத்தவர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்.! விபரம் உள்ளே.! 

Amazon Logo (Photo Credit: Pixabay)

மாதம் ரூ.89 மட்டுமே கட்டணம்: ஒரு குடும்பத்திற்கு என மொத்தமாக பார்த்தால், மாதத்திற்கு ரூபாய் 89-க்கு சேவை வழங்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ரூபாய் 1000 மட்டுமே இதன் வாயிலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஜியோ சினிமா செயலியின் பயனர்கள் அதிகரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ சினிமா செயலியில் குழந்தைகளுக்கான வீடியோ முதல், இந்தியன் பிரீமியர் லீக் (IPL Season), ஹாலிவுட்டில் வெளியான பல சிறந்த திரைப்படங்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா செயலி வாயிலாக 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் ஜியோ சினிமா செயலியின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.