ஏப்ரல் 25, ஜெனிவா (Geneva): உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) சார்பில் ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 11, 13, 15 ஆகிய வயதுடைய சிறார்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் அதிர்ச்சிக்குறிய விஷயங்களை உறுதி செய்துள்ளது. மொத்தமாக சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேரிடம் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு கவலைக்குரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இதனால் நீண்டகால விளைவுகள் ஏற்படுத்தும் தாக்கம் ஆபத்தானவை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியாது, அவை ஆபத்தான சூழலுக்கு நம்மை அழைத்துச்செல்லும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறார்களின் அதிர்ச்சிதரும் வயது பட்டியல்: இளைஞர்களிடையே மதுபானம் அருந்தும் பழக்கத்தை பொறுத்தமட்டில் 15 வயதுடையவர்களில் 57% நபர்கள் குறைந்தது ஒரு முறையாவது மதுபானம் அருந்தி இருக்கின்றனர். இதில் சிறுமிகளின் எண்ணிக்கை 59 விழுக்காடாகவும், சிறுவர்களின் எண்ணிக்கை 56 விழுக்காடாகவும் இருந்துள்ளது. சிறுவர்களிடம் குடிப்பழக்கம் குறைந்து இருந்தாலும், சிறுமிகளிடம் இப்பழக்கம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு ஒரு முறையாவது கட்டாயம் மதுபானம் அருந்தியாக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் இளம் தலைமுறையில், 11 வயதுடைய சிறுவர்களில் எட்டு சதவீதம் பேரும், 5% சிறுமிகளும் மதுபானம் அருந்துகின்றனர். 15 வயதிற்குள் 38 சதவீத சிறுமிகள் 30 நாட்களில் ஒரு முறையாவது கட்டாயம் மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். JEE Main Exam 2024: ஜெஇஇ மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 100% மதிப்பெண் எடுத்தவர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்.! விபரம் உள்ளே.!
மதுவை தொடர்ந்து இ-சிகிரெட் பழக்கம்: அதேபோல, சிறுவர்களில் 36 விழுக்காடு பேர் மதுபானத்தை கையில் எடுத்திருக்கின்றனர். குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே ஆல்கஹால் ஏற்படுத்தும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், அவை தொடர்கிறது. மத்திய ஆசியாவில் உள்ள 53 நாடுகளை ஒன்றிணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுவை விட, அடுத்தபடியாக மிகக்கொடிய பிரச்சனையாக கருதப்படும் இ-சிகரெட் விவகாரத்தில் புகைபிடித்தல் விகிதம் குறைந்து வந்தாலும், 11 வயது முதல் 15 வயதுடையவர்களில் 13 சதவீதம் பேர் கடந்த 2022 ஆம் ஆண்டில் புகைப்பழக்கத்தை கையில் எடுத்து தெரியவந்துள்ளது.
கவலை தெரிவிக்கும் உலக சுகாதார அமைப்பு: 15 வயதுடைய நபர்களில் 32% பேரும், இவர்களில் 20 விழுக்காடு நபர்கள் 30 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு இருக்கின்றனர். ஐரோப்பிய பிராந்தியம் மட்டுமல்லாது பல நாடுகளிலும் குழந்தைகளிடையே ஈ-சிகரெட் பழக்கம் தொற்றியுள்ள நிலையில், இவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பொருள்களின் மீதான தடை மற்றும் விளம்பர கட்டுப்பாடு போன்றவற்றுக்கும் நாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தனது கோரிக்கையை வைக்கப்பட்டுள்ளது. இளம் பருவத்தில் இவ்வாறான ஆபத்தான நடவடிக்கைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், கஞ்சா பயன்பாடு குறைந்தாலும் ஈ-சிகரெட் பயன்பாடு என்பது அதிகரித்து இருப்பது வருத்தத்திற்குரியது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.