செப்டம்பர் 02, கண்டி (Cricket News): இலங்கையில் உள்ள கண்டி, பல்லேகேலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இன்று இந்தியா - பாகிஸ்தான் (India Vs Pakistan) அணிகள் மோதிக்கொள்ளும் ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 (Asia Cricket Cup 2023) ஆட்டத்தின் மூன்றாவது ஒருநாள் போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடுகின்றனர். அணியை ரோஹித் சர்மா வழிநடுத்துகிறார். UK Shocker: 23 குழந்தைகள் பலாத்காரம், 123 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; இளம் காவலரின் அதிர்ச்சி செயல் அம்பலம்.!
இன்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தில் ரோஹித் சர்மா 22 பந்துகளில் 11 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார், ஷுப்னம் ஹில் 32 பந்துகளில் 10 ரன்கள் அடித்து வெளியேறினார், விராட் (Virat Kohli) 7 பந்துகளில் 4 ரன்னும், ஸ்ரேயாஸ் 9 பந்துகளில் 14 ரன்னும் அடித்து வெளியேறி இருந்தனர்.
முதல் 15 ஓவர்களுக்குள் அடுத்தடுத்து முக்கிய புள்ளிகள் அவுட்டாகி வெளியேறியது இந்திய அணிக்கு அதிர்ச்சியை அளித்தாலும், இஷான் (Ishan Kishan) மற்றும் ஹர்திக் பாண்டியா (Hardick Pandya) ஜோடி களத்தில் நின்று ஆடி அணிக்கு ரன்களை சேர்த்தது. இறுதியில் ஹர்திக் 90 பந்துகளில் 87 ரன்னும், இஷான் கிஷான் 81 பந்துகளில் 82 ரன்னும் அடித்து அவுட்டாகி வெளியேறினர்.
இறுதியில் ஆடிய ஜடேஜா (Jadeja) 22 பந்துகளில் 14 ரன்னும், ஷரத்துல் தாகூர் 3 பந்துகளில் 3 ரன்னும், யாதவ் 13 பந்துகளில் 4 ரன்னும், பும்ரா 14 பந்துகளில் 16 ரன்னும், முகம்மத் சிராஜ் 1 பந்துகளில் 1 ரன்னும் என மொத்தமாக 10 விக்கெட்டுகளையும் 48.5 ஓவரில் பறிகொடுத்த இந்தியா 266 ரன்கள் எடுத்து. 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.