IND Vs PAK Asia Cup 2025 | இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் (Photo Credit: @@rushiii_12 X)

செப்டம்பர் 28, துபாய் (Sports News Tamil): துபாயில் ஆசியக்கோப்பை 2025 கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், அதன் இறுதிக்கட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், சவுதி அரேபியா, ஓமன் என பல அணிகள் மோதிய ஆட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் (India Vs Pakistan Cricket Match) இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Cricket Stadum) நடைபெறுகிறது. IND Vs PAK Asia Cup Final 2025: ஆசியக்கோப்பை 2025 தொடரில், இந்தியா Vs பாகிஸ்தான் இறுதி யுத்தம்.. எப்போது? நேரலை எப்படி? விபரம் இதோ.! 

இந்தியா எதிர் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி (India Vs Pakistan Cricket Match Update):

  • போட்டி அணிகள்: இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan)
  • போட்டி இடம்: துபாய் கிரிக்கெட் மைதானம் (Dubai International Cricket Stadium)
  • போட்டி நாள்: செப்டம்பர் 28, 2025
  • போட்டி நேரம்: இரவு 08:00 மணி (இந்திய நேரப்படி)
  • டாஸ் நேரம்: இரவு 07:30 மணி (இந்திய நேரப்படி)
  • வானிலை: மழைக்கு வாய்ப்பு இல்லை, அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும்
  • நேரலை: சோனி லைவ் (Sony Liv App), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி (Star Sports Televisions)

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் கேள்விக்குறி (India Vs Pakistan):

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இறுதிப்போட்டி குறித்து தென்னாபிரிக்க அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மோர்னே மோர்கெல் தெரிவிக்கையில், "இந்திய கிரிக்கெட் அணி உற்சாகத்துடன் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் போராட்டத்துக்குள் இருக்கிறது. இந்திய அணி திறமையால் நிரம்பி யாராலும் தடுக்க இயலாத இடத்தினை தக்கவைத்துள்ளது" என இந்திய அணிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இன்று இரவில் நடைபெறும் போட்டியின் விதிமுறைப்படி, போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளன தலைவர் மோஷின் வெற்றிக்கோப்பையை தர வேண்டும். ஆனால், இதுவரை நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இரண்டு நேரெதிர் ஆட்டங்களில் கேப்டன்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் இடையே ராஜாங்க உறவுகள் கடுமையாக சேதமடைந்த நிலையில், விளையாட்டிலும் அது தொடருகிறது. அதனால், போட்டியில் இந்தியா வென்றால் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்னேவை கோப்பையை வாங்க அனுப்பி வைக்குமாறு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்றைய போட்டியின் வெற்றி பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி (India Vs Pakistan Cricket Match) வெற்றிக்கோப்பை குறித்து நெட்டிசன்கள் கருத்து: