
மார்ச் 04, துபாய் (Sports News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி முதல் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி பௌலிங் செய்து வருகிறது. Cooper Connolly: முதல் விக்கெட்டை உறுதி செய்த முகமது சமி.. ரன்களே எடுக்காமல் வெளியேறிய கூனாலி.!
ஆஸியின் முக்கிய விக்கெட் காலி:
இந்நிலையில், வருண் சக்கரவர்த்தியின் முதல் ஓவரில், 8.2 வது ஓவரில், டார்விஸ் ஹெட் தனது விக்கெட்டை இழந்தார். 33 பந்தில் 39 ரன்கள் அடித்த டார்விஸ் ஹெட் (Tarvis Head), வருண் சக்கரவர்த்தியின் பந்தில் சுப்மன் ஹில் கேட்ச் பிடிக்க, டார்விஸ் ஹெட் விக்கெட் இழந்து வெளியேறினார். வருண் சக்கரவர்த்தி வழக்கம்போல தனது மாயாஜாலம் காண்பித்து விக்கெட் எடுத்து அசத்தினார்.
வருண் சக்கரவர்த்தியின் பந்தில் டார்விஸ் வெளியேறிய காணொளி:
India's HEADACHE is gone! #VarunChakaravarthy weaves his magic on the field and brings a crucial breakthrough!
📺📱 Start watching FREE on JioHotstar : https://t.co/B3oHCeWFge#ChampionsTrophyOnJioStar 👉 #INDvAUS | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports… pic.twitter.com/4bvzc5yE9x
— Star Sports (@StarSportsIndia) March 4, 2025