
மார்ச் 01, சென்னை (Sports News): 9 வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டிகள், 29 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பை கொடுத்தது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என 8 அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில், குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம்பெற்று இருந்தன. எஞ்சிய நாடுகள் குரூப் 'பி' பிரிவில் இருக்கின்றன. இதில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் தான் எதிர்கொண்ட போட்டிகளில் தோல்வியை தழுவி, அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டது. இதனால் குரூப் ஏ பிரிவில் இருக்கும் நியூசிலாந்து, இந்தியா அணிகள் அரையிறுதி தகுதிச்சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. குரூப் 'பி' பிரிவை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் அரையிறுதி தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. ENG Vs SA: இங்கிலாந்துக்கு மிகப்பெரிய இழப்பு.. 179 ரன்களுக்கு ஆல் அவுட்.!
அரையிறுதியில் போட்டியிடும் அணியின் வழிமுறைகள்:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித்தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரையில், குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இந்தியா, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. நாளைய இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் வாயிலாக, புள்ளிப்பட்டியலில் முதல் இடம் யாருக்கு? என்பது உறுதியாகிவிடும். இதன் வாயிலாக குரூப் ஏ பிரிவில் இருக்கும் முதல் அணியும், குரூப் பி பிரிவில் இருக்கும் இரண்டாம் அணியும் முதல் அரையிறுதி தகுதிச்சுற்றில் போட்டியிடும். குரூப் பி பிரிவில் இருக்கும் முதல் அணியும், குரூப் ஏ பிரிவில் இருக்கும் இரண்டாவது அணியும் இரண்டாவது அரையிறுதி தகுதிச்சுற்றில் போட்டியிடும். நாக்கவுட் முறையில் நடைபெறும் ஆட்டத்தில், இரண்டு அரையிறுதி தகுதியில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும். இதனால் அடுத்து வரும் ஒவ்வொரு ஆட்டமும் இந்தியாவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றாலும், அரையிறுதி தகுதிச்சுற்று மற்றும் இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே கோப்பை வசம் வரும். நாக்கவுட் வரை சென்று இந்தியா வெளியேறினால், அது அவமானமாகவும் கருதப்படும். India Vs South Africa Masters: இந்தியா மாஸ்டர்ஸ் Vs தென்னாபிரிக்கா மாஸ்டர்ஸ் போட்டி இன்று.. எங்கு நடக்கிறது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
இந்தியா., நியூசிலாந்து உட்பட 4 அணிகள் தேர்வு:
இறுதி அரையிறுதி தகுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா அணிகள் தேர்வாகியுள்ளதை உறுதி செய்துள்ள ஐசிசி நிர்வாகம், தனது வலைப்பக்கத்தில் அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது. 04 மார்ச் 2025 அன்று முதல் அரையிறுதி தகுதி சுற்று துபாயில் வைத்து இந்திய அணிக்கு எதிராக நடைபெறும். இரண்டாவது அரையிறுதி சுற்று 05 மார்ச் 2025 அன்று, லாகூரில் உள்ள காதபி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும்.
அரையிறுதிக்கு தேர்வாகியுள்ள அணிகள் விபரம்:
Australia 🇦🇺 India 🇮🇳 New Zealand 🇳🇿 South Africa 🇿🇦
We have our 4️⃣ semi-finalists of the #ChampionsTrophy 2025 🔥
More ➡️ https://t.co/0MmEMSIfFq pic.twitter.com/nZeGXCUzJ7
— ICC (@ICC) March 1, 2025