
பிப்ரவரி 20, துபாய் (Sports News): இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வங்கதேசம் தேசிய கிரிக்கெட் அணி மோதும், சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்தியா பௌலிங் செய்தது. தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் வீரர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினர். Soumya Sarkar & Najmul Hossain Wicket: 2 ஓவரில் 2 ரன்கள், 2 விக்கெட் லாஸ்.. தடுமாறும் வங்கதேசம்.!
அக்சர் படேல் அசத்தல் பந்துவீச்சு:
இந்நிலையில், ஆட்டத்தில் 8 வது ஓவரை அக்சர் படேல் வீசினார். அவர் 8.2 வது பந்தை வீசியபோது, அதனை எதிர்கொண்ட டான்ஜித் ஹாசின் (Tanzid Hasan) கே.எல் ராகுலிடம் விக்கெட் பறிகொடுத்து வெளியேறினார். அதனைத்தொடர்ந்து, அடுத்த பந்தில் முஷபிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) களமிறங்கிய நிலையில், அவரும் அக்சர் படேலின் பந்தில் கே.எல் ராகுலிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். ஹாட்ரிக் விக்கெட்டுக்கு குறிவைக்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா விக்கெட்டை தவறவிட்டார். 10 ஓவர்களில் தடுமாறிய வங்கதேச அணி மொத்தமாக 5 விக்கெட்டை இழந்து 39 ரன்களை எடுத்து இருந்தது. 25 ஓவர்களில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.
அக்சர் படேல் (Axar Patel Back to Back Wickets) 2 விக்கெட் எடுத்து அசத்தல்:
TWO WICKETS FOR AXAR!
Tanzid Hasan - 25(25)
Mushfiqur Rahim - 0(1) pic.twitter.com/hciKZhUhSd
— CricketGully (@thecricketgully) February 20, 2025
ஹசன் (Tanzid Hasan) & முஷபிகுர் (Mushfiqur Rahim) விக்கெட்டை வீழ்த்திய அக்சர்:
Tanzid Hasan ✅
Mushfiqur Rahim ✅
Axar Patel into the attack and he brings with him - BACK to BACK wickets ⚡️⚡️
KL Rahul with two sharp catches! 👏👏
Follow the Match ▶️ https://t.co/ggnxmdG0VK#TeamIndia | #BANvIND | #ChampionsTrophy pic.twitter.com/8g5BaHYzXj
— BCCI (@BCCI) February 20, 2025