
மார்ச் 07, லக்னோ (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's WPL 2025) போட்டியில், நேற்று வரை 16 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்தது. நேற்று உபி வாரியர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (UP Warriorz Vs Mumbai Indians Women WPL 2025) அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் தோற்ற உபி அணி, முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு உபி அணி 150 ரன்கள் எடுத்திருந்தது. டாஸ் வென்று இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்த மும்பை அணி 18.3 ஓவரில் 153 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி அடைந்தது. India Vs New Zealand Cricket: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி: இந்தியா Vs நியூசிலாந்து.. போட்டி எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
10% அபராதம் விதிப்பு:
இந்நிலையில், போட்டியின்போது, மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத், நடுவர் கொடுத்த முடிவுக்கு எதிராக வாக்குவாதம் செய்தார். இதுதொடர்பாக எதிரணியின் வீரருடனும் அவர் கடிந்துகொண்டார். இதனால் போட்டியின் நடுவே கவுர் டபிள்யு.பி.எல் விதிமுறை 2.8 ஐ மீறியதாகவும், அதனால் அவருக்கு போட்டித்தொகையில் 10% அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்டான வாக்குவாதத்தில், கவர் விதியை மீறி நடந்துகொண்டதாக அபராதம் விதிப்பு:
Here's what happened yesterday for which Harmanpreet Kaur was fined 10% of her match fee.#CricketTwitter #WPL2025 pic.twitter.com/zeOGFWBuav
— Female Cricket (@imfemalecricket) March 7, 2025