
மார்ச் 06, துபாய் (Sports News): ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டிகளில், தகுதிச்சுற்றுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில், இந்தியா நியூசிலாந்து (India New Zealand) அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இருக்கிறது. நடப்பு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், இந்தியா தேசிய கிரிக்கெட் அணி முதலில் இறுதிப்போட்டிக்கு முதலில் தேர்வாகியது. அதனைத்தொடர்ந்து, நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி இடையே நடந்த அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி எங்கு? எதனால்?
2025ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் தலைமையேற்று நடத்தினாலும், இந்தியா தனது வீரர்களை பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்ட காரணத்தால், இந்தியா பங்கேற்ற போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது இறுதிப்போட்டிக்கு இந்தியா தேர்வாகி இருக்கிறது. பாகிஸ்தான் தகுதி சுற்றிலேயே வீழ்ந்தது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி (ICC Champions Trophy Final 2025), துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium) நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் அணி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ரூ.20 கோடி பரிசுடன் தாயகம் திரும்பும். இறுதி வரை சென்று தோல்வியுற்று ரன்னர் பட்டத்தை பெறும் அணி, ரூ.10 கோடி பரிசுத்தொகையுடன் தாயகம் திரும்பும். Wiaan Mulder: ஐபிஎல் 2025: ஹைதராபாத் அணியில் முக்கிய மாற்றம்.. காயம் காரணமாக வீரர் விலகல்.. மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீரர்.!
இந்தியா எதிர் நியூசிலாந்து:
இந்தியா - நியூசிலாந்து அணிகள் (IND Vs NZ Cricket) மோதிக்கொள்ளும் ஆட்டத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒருசேர வெற்றிக்கான முனைப்புடன் விளையாடி வருகின்றன. தகுதி சுற்றில் நியூசிலாந்து அணி இந்தியாவிடம் தோற்றுப்போன நிலையில், அதற்கும் சேர்த்து பழிதீர்க்க ஆயத்தமாகி வருகிறது. அதேநேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி தனது பிரம்மாஸ்திரமாக வைத்திருந்த வருண் சக்கரவர்த்தியை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெளிக்கொண்டு வந்து, மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதேபோல, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அரையிறுதி சுற்றிலும், இந்திய அணி வருணை பயன்படுத்திக்கொண்டது. இது இந்தியாவின் செயல்பாடுகளை நியூசிலாந்து கணிக்க உதவியாக இருந்தது. ஸ்பின்னர்களுக்கு ஏற்ற மைதாமானமாக துபாய் கிரிக்கெட் மைதானம் இருந்தபோதிலும், விராட் கோலியின் விடாமுயற்சி, கே.எல் ராகுலின் அதிரடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. இதனால் சாம்பியன்ஸ் டிராபியை பெறுவதில் இரண்டு அணிகளுக்கும் போட்டித்தன்மை நிலவுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணி வீரர்கள் விபரம்:
ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ஷ்ரேயஸ் ஐயர், ஸுப்மன் ஹில், விராட் கோலி, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகம்மது ஷமி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மிட்செல் சான்டனர் (Mitchell Santner) தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் கேன் வில்லியம்சன், மார்க் சாம்பான், ரச்சின் ரவீந்திரா, வில் யங், டேரியல் மிட்செல், கிளன் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், தேவன் கான்வே, டாம் லேதம், ஜேக்கப் துபிய், கைல் ஜெமிசன், மேத் ஹென்ரி, நாதன் ஸ்மித், வில் ஓ ரூர்க் ஆகியோர் விளையாடுகின்றனர்.
போட்டி நடைபெறும் நாள்: 09 மார்ச் 2025
போட்டி நடைபெறும் இடம்: சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
போட்டி தொடங்கும் நேரம்: மதியம் 02:30 மணி (இந்திய நேரப்படி)
போட்டி டாஸ் நேரம்: மதியம் 02:00 மணி (இந்திய நேரப்படி)
போட்டி நேரலை ஒளிபரப்பு நேரம்: மதியம் 01:30 முதல் இரவு 11:00 வரை (இந்திய நேரப்படி)
போட்டி நேரலை பார்க்க: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil)
துபாய் வானிலை (Dubai Weather):
பகல் நேர வெப்பநிலை: 29 டிகிரி செல்ஸியஸ்
இரவு நேர வெப்பநிலை: 22 டிகிரி செல்ஸியஸ்
மழைக்கான வாய்ப்பு: இல்லை, வறண்ட வானிலை
காற்றின் வேகம்: மணிக்கு 12 கிமீ