MS Dhoni in Tamil Tradition (Photo Credit: @ChennaiIPL X)

மார்ச் 09, சென்னை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டித்தொடர், மார்ச் 25, 2025 முதல் தொடங்கி மே 22, 2025 வரையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை எதிர்பார்த்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகளும் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். சென்னையை அணியை பொறுத்தவரையில், எம்.எஸ் தோனி (MS Dhoni) இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தீவிர பயிற்சியை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மேற்கொண்டு இருக்கிறார். IND Vs NZ Toss Update: இந்தியா எதிர் நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி.. நியூசி., டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.! 15 வது முறையாக டாஸ் தோற்ற ரோஹித்.!

பாரம்பரிய உடையில் தோனி:

அவ்வப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி நிர்வாகம் சார்பில், தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படம், அவர்களின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கங்களில் பகிர்கின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர நாயகன், தமிழகத்தின் செல்லப்பிள்ளை என வருணிக்கப்படும் எம்.எஸ் தோனி, தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி-சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வேட்டி-சட்டையுடன் தல தோனி (MS Dhoni in Hometown Traditional Dress):