
மார்ச் 09, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி (ICC Champions Trophy 2025 Final), துபையில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் தகுதிச்சுற்று, அரையிறுதியில் வெற்றி அடைந்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி மோதிக்கொள்கின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து கிரிக்கெட் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் மோதுகிறது. இரண்டு அணிகளும் சமமான அளவு திறனுடன் இருப்பதால், இறுதிப்போட்டியில் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. India Vs New Zealand Cricket: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி: இந்தியா Vs நியூசிலாந்து.. போட்டி எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
இந்தியா எதிர் நியூசிலாந்து (IND Vs NZ Champions Trophy Final 2025):
இந்நிலையில், ரோஹித் டாஸ் சுற்றிய நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி பௌலிங் செய்ய தயாராகி இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தொடர்ந்து 15 வது முறையாக இந்திய கிரிக்கெட் அணி டாஸ் தோற்று இருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர். மிட்செல் சான்டனர் அணியின் சார்பில் வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில் ஓ'ரூர்க் ஆகியோர் விளையாடுகின்றனர்.
டாஸ் தோற்று இந்தியா முதலில் பௌலிங்:
🚨 Toss News 🚨
New Zealand have elected to bat against #TeamIndia in the #ChampionsTrophy #Final!
Updates ▶️ https://t.co/uCIvPtzs19#INDvNZ pic.twitter.com/pOpMWIZhpj
— BCCI (@BCCI) March 9, 2025