ஜனவரி 21, புதுடெல்லி (Sports News): ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டிகள், 14 மார்ச் 2025 ல் தொடங்கி 25 மே 2025 ல் (IPL 2025 Schedule) நிறைவுபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய சம்மேளனத்தின் அனுமதியுடன் நடத்தப்படும் இந்திய பிரீமியர் லீக் (Indian Premier League) போட்டியில், 10 அணிகள் பங்கேற்று தங்களுக்குள் பலபரீட்சை நடத்தும் 74 போட்டிகளில் ஒவ்வொன்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தும். 20 ஓவர்கள் முறையில், டி20 ஆட்டமாக நடைபெறும் ஐபிஎல் போட்டியில், உலகளாவிய முக்கிய வீரர்களும் பல்வேறு அணிகளில் இடம்பெற்று இருப்பார்கள் என்பதால், ஒவ்வொரு ஆட்டமும் கொண்டாட்டத்துடன் இருக்கும். IPL 2025 Date: கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. 2025 ஐபிஎல் தேதி அறிவிப்பு..!
ரிஷப் பண்ட் (Rishabh Pant) கேப்டனாக நியமனம்:
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளால் இடம்பெற்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியின் கேப்டனாக (LSG Captain) ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்திய அணிக்காக சர்வதேச விளையாட்டுகளில் மூன்றாவதாக களமிறங்கும் ரிஷப் பண்ட், லக்னோ அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கி செயல்படும் லக்னோ அணி, தற்போது 2025 ஐபிஎல் போட்டிக்காக தயாராகி வருகிறது. இதன் முன்னோட்டமாக அந்த அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல், குர்னால் பாண்டியா, நிகோலஸ் பூரான் ஆகியோர் செயல்பட்டு இருக்கின்றனர்.
ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்:
Captain. Rishabh. Pant.
That’s the tweet🔥 pic.twitter.com/3NdCc00l5D
— Lucknow Super Giants () January 20, 2025