Team India T20 2024 | Cyclone Way to Barbados (Photo Credit: @sachin_rt X / @ag_Journalist X)

ஜூலை 01, பார்படோஸ் (World News): அமெரிக்கா & மேற்கிந்திய தீவுகள் நாடு இணைந்து நடத்திய ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) போட்டியில், இந்தியா மிகப்பெரிய வெற்றியை அடைந்து கோப்பையை தனதாக்கியது. கரீபியன் தீவுகளில் உள்ள பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா - தென்னாபிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கனவுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தது.

உலகெங்கும் இருந்து குவிந்த வாழ்த்து:

அதனைத்தொடர்ந்து, வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தது. மேலும், இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் இந்திய அணியின் கேப்டன்கள் சச்சின், எம்.எஸ். தோனி, உட்பட கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். DK as RCB Coach & Mentor: பெங்களூர் அணியின் வழிகாட்டி, பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்; "ஈ சாலா கப் நம்தே" கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! 

விடுதியில் இந்திய கிரிக்கெட் அணி:

வெற்றிக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி இன்று தாயகம் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், போட்டி நடந்த பார்படோஸ் தீவை புயல் ஒன்று தாக்குவதற்கு தயாராக வந்தது. இதனால் பார்படோஸில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர அறிவுறுத்தப்பட்டு, விமானம் மற்றும் போக்குவரத்து போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன. இதனால் இந்திய அணி புயலுக்கு நடுவே, தாங்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே தஞ்சம் புகுந்துள்ளது.

புயலால் ரத்தான விமான சேவை:

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மட்டும் பார்படோஸ் தீவில் மாட்டிக்கொண்ட நிலையில், பிற அணிகள் அனைத்தும் அங்கிருந்து முன்னதாகவே வெளியேறி இருந்தன. தென்னாபிரிக்க அணியும் இறுதிக்கட்டத்தில் மீட்புப்படை விமான உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு புயல் எச்சரிக்கைக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய அணி தாயகம் திரும்பும் முன் விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்ட காரணத்தால், இன்று மதியத்திற்கு மேல் வரை பார்படோஸ் தீவில் இந்திய அணி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. NK Launches Missile: அடுத்தடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா; காரணம் என்ன?.! 

விரைவில் தாயகம் திரும்பும் இந்திய அணி:

புயல் ஓய்ந்த பின்னர் மேற்படி இந்திய அணி பத்திரமாக தாயகம் அனுப்பி வைக்கப்படும். தற்போது வரை இந்திய வீரர்கள் பத்திரமாக இருக்கும் நிலையில், அவர்கள் நேற்று இரவு பேப்பர் தட்டுகளில் தங்களின் உணவை சாப்பிட்டு இருக்கின்றனர். ஏனெனில், புயல் போன்ற காலங்களில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பை இடங்களுக்கு சென்றுவிடுவார்கள் என்பதால், மீட்புப்படை அதிகாரிகள் உணவுகளை பத்திரமாக கொள்முதல் செய்து வைத்திருப்பர். மக்களும் இறுதி நேரத்தில் உணவுப்பொருட்களை தங்களின் வீடுகளுக்கு வாங்கி சென்றுவிடுவர். இன்று மதியத்திற்கு மேல் அங்கு நிலைமை சீரானதும் இந்திய அணி தாயகம் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேப்பர் தட்டுகளில் உணவு சாப்பிட்ட இந்திய கிரிக்கெட் அணி:

அசுரவேகத்தில் நெருங்கும் புயல்: