நவம்பர் 03, மும்பை (Cricket News): இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி 2024 (IND Vs NZ Test Series 2024), பெங்களூர் மற்றும் புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இரண்டு ஆட்டங்களிலும் நியூசிலாந்து அணி வெற்றியை அடைந்த நிலையில், இறுதி மற்றும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மும்பை வான்கடை மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணி சொதப்பல்:
இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 263 ரன்னும், நியூசிலாந்து அணி 235 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. களத்தில் இந்திய அணியின் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், ரிஷப் மட்டும் தாக்குப்பிடித்து இன்று உணவு இடைவெளி வரை 50 பந்துகளில் 53 ரன்கள் அடித்துள்ளார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த இந்திய அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. IND Vs NZ 3rd Test: நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலை.. ஜடேஜா, அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு..!
ரிஷப் பண்ட்:
இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவைப்படும் நிலையில், களத்தில் இருக்கும் ரிசப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், முகமது சிராஜ், ஆகாஷ் ஆகியோரை எதிர்பார்த்து இந்தியாவே காத்திருக்கிறது. கடந்த 2000 ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து வெற்றி கோப்பையை தவறவிட்டது. அதற்கு பின் 24 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது இந்திய அணி சொந்த மண்ணில் வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது.
இறுதியாக வாஷ் அவுட் ஆனது எப்போது?
இந்நிலையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் இந்த ஆட்டமானது, உலக அளவில் கவனத்தை பெறும் வகையில் இந்திய அணி மூன்று டெஸ்ட் தொடரில், இரண்டு தொடரில் படுதோல்வி அடைந்தது. எஞ்சிய ஒரு டெஸ்ட்டும் இந்தியாவின் கைகளில் இருந்து நழுவிச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ரிஷப் மீதான பார்வை திரும்பி இருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் அதற்கான முடிவுகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி அடைந்தால், இந்திய அணியை தொடக்கத்தில் இருந்து அதிரடியாக எதிர்கொண்ட பெருமையுடன், 24 ஆண்டுகால இந்திய அணியின் வெற்றி வரலாற்றை முடிவுகொண்டு வந்த சாதனையையும் படைக்கும். நியூசிலாந்து தோல்வியுற்றால் இந்திய அணி ஆறுதல் வெற்றியுடன் மண்ணில் நீடிக்கும்.
நின்று ஆடிய ரிஷப் பண்ட்:
That's a gritty half-century from Rishabh Pant 👌👌
His 14th FIFTY in Test Cricket 👏👏
Scorecard - https://t.co/KNIvTEyxU7#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank | @RishabhPant17 pic.twitter.com/l8xULaauZM
— BCCI (@BCCI) November 3, 2024