பிப்ரவரி 02, மும்பை (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி (Team England), 5 டி20 போட்டிகள் (India Vs England T20i Series 2025) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் (IND Vs ENG ODI Series 2025) இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு களம்காண்கிறது. இந்த தொடரில் டி20 ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 (India Vs ENG T20 1st Match 2025) ஆட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் (IND Vs ENG T20i 2nd Match 2025), இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. குஜராத்தில் நடந்த மூன்றாவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி அடைந்தது. புனேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், (IND Vs ENG 4th T20i Match) நான்காவது டி20 ஆட்டம் நடைபெற்ற நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. Abhishek Sharma: 18 பந்துகளில் 50 ரன்கள்.. 37ல் 100.. அபிஷேக் ஷர்மா அசத்தல் ஆட்டத்தால் அதிர்ந்துபோன வான்கடே அரங்கம்.!
அரங்கத்தை அதிரவிட்ட அபிஷேக் (Abhishek Sharma):
அதனைத்தொடர்ந்து, இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஐந்தாவது டி20 ஆட்டம் (IND Vs ENG 5th T20I) நடைபெற்றது. ஆட்டத்தில், இந்திய அணி டாசில் தோல்வி அடைந்து பேட்டிங் செய்தது. இங்கிலாந்து பந்துவீசிய நிலையில், அபிஷேக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியில் அபிஷேக் ஷர்மா தொடக்கத்தில் இருந்து பவுண்டரி, சிக்ஸ் என அதிரடியாக அடித்து ஆடினார். சுமார் 18 பந்துகளில் அவர் எளிமையாக 50 ரன்களை எட்டி பிடித்தார். முன்னதாக யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில், 12 பந்துகளில் 50 ரன்களை கடந்து சாதனை படைத்து இருந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அபிஷேக் 37 பந்துகளில் 100 ரன்களை அடித்து சாதனை படைத்தார். முன்னதாக 35 பந்துகளில் டி20 போட்டியில் 100 ரன்களை அடித்து அசத்தி இருந்தார். அபிஷேக் சர்மா 100 ரன்களை நெருங்க இன்று மட்டும் 10 சிக்ஸர், 5 பவுண்டரி அடித்து இருந்தார். IND Vs ENG 5th T20I: இந்தியா - இங்கிலாந்து ஐந்தாவது டி20 ஆட்டம் இன்று; டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச்சு.!
இங்கிலாந்து அணிக்கு 248 ரன்கள் டார்கெட்:
களத்தில் இருந்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. சாம்சன் 7 பந்துகளில் 16 ரன்னும், அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்னும், டி. வர்மா 15 பந்துகளில் 24 ரன்னும், சிவம் துபே 13 பந்துகளில் 30 ரன்னும், ஏ. படேல் 11 பந்துகளில் 15 ரன்னும் அதிகபட்சமாக அடித்து இருந்தனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு 248 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அபிஷேக் சர்மாவின் இன்றைய ஆட்டம், வான்கடே மைதானத்தை அதிரவைத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் கார்ஸ் 3 விக்கெட்டையும், வுட் 2 விக்கெட்டையும் அதிகபட்சமாக கைப்பற்றி இருந்தனர்.
37 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்திய அபிஷேக் சர்மா:
HUNDRED off 37 Deliveries 💥
..And counting!
Keep the big hits coming, Abhishek Sharma! 😎
Live ▶️ https://t.co/B13UlBNdFP#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/pG60ckOQBB
— BCCI (@BCCI) February 2, 2025