டிசம்பர் 22, டோக்கியோ (Technology News): ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (JAXA), பூமியில் மோதவுள்ள சிறுகோளினை இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்பத்தை சோதித்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஜப்பான் சார்பில் விண்ணில் ஏவப்பட்ட ஹயபுஸா விண்கலம், பூமியை நோக்கி வரும் சிறுகோளை கண்டறிந்தது.
ஜப்பானின் தொடர் ஆராய்ச்சி: 2018ம் ஆண்டு சிறுகோள் தொடர்பான ஆராய்ச்சியில் களமிறங்கிய ஜப்பான், அதன் இலக்கை அடைந்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மாதிரிகளை சேகரித்து டிசம்பர் 2020ல் அதனை பூமிக்கும் அனுப்பி வைத்தது. 30 மீட்டர் விட்டம் கொண்ட விண்கல், பூமியில் இருந்து 374,000 கிமீ தூரத்தில் சூரியனையும் சுற்றுகிறது என்பதை உறுதி செய்தது. Long Night in India: இந்தியாவில் இன்று பகல் நீண்ட இரவு: வானியல் மாயாஜாலம் பற்றி தெரிஞ்சிக்கோங்க... காரணம் இதுதான்.!
விண்கல்லை வானிலே தாக்கி அழிக்கும் முயற்சி: இந்த விண்கல் பூமியை எதிர்காலத்தில் தாக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனை தவிர்க்கும் முயற்சியை மேற்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக ஹயபுஸா 2 ராக்கெட்டை தயாரித்தும் வருகிறது. பூமியை தாக்கவுள்ள விண்கல்லுக்கு 1998 KY26 என பெயரிடப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றம்போல, விண்வெளி சீற்றம்: ஒவ்வொரு 100 முதல் 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை விண்கற்கள் பூமியில் மோதுவது தொடருகின்றது. இதனால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கவே அதுசார்ந்த ஆய்வுகளை ஜப்பான் முன்னெடுத்துள்ளதாகவும் ஜப்பானிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.