
பிப்ரவரி 19, மும்பை (Sports News): மும்பை அணியின் முன்னாள் கேப்டன் மிலிந்த் ரேஜ் (Milind Rege), மாரடைப்பால் மும்பையில் இன்று (பிப்ரவரி 19) காலமானார். 76 வயதான இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மும்பை கிரிக்கெட்டின் ஜாம்பவான், கேப்டன், சீனியர் தேர்வுக் குழுவின் தலைவர், நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் ஆலோசகராகவும் பணியாற்றினார். பல போட்டிகளில் ஆல் ரவுண்டராக ஜொலித்துள்ளார். GG Vs MI WPL 2025 Highlights: மும்பை அணி திரில் வெற்றி.. நடாலி அரைசதம் கடந்து அசத்தல்.. அமெலியா சிறப்பான பந்துவீச்சு.!
பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் மறைவு:
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கரின் நெருங்கிய நண்பரான இவர், மும்பை அணி ஐந்து ரஞ்சி டிராபி பட்டத்தை வென்ற சீசன்களில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். 1966-67 மற்றும் 1977-78 க்கு இடையில் 52 முதல் தர போட்டிகளில் விளையாடிய ஆப்-ஸ்பின் ஆல்ரவுண்டரான இவர், 126 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 23.56 சராசரியாக 1532 ரன்களையும் எடுத்தார். இதன்பிறகு, மிலிந்த் ரேஜ் மும்பை கிரிக்கெட் சங்கத்துடன் (MCA) நெருக்கமாக இருந்துள்ளார். அவர், தலைமை தேர்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார். 2020ஆம் ஆண்டில், அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மிலிந்த் ரேஜ்வின் மறைவுக்கு பிசிசிஐ இரங்கல்:
The BCCI mourns the passing of Milind Rege, former Mumbai captain and selector. A pillar of Mumbai cricket, he played a key role in its growth and legacy. His keen eye for talent and contributions as a commentator earned admiration across the cricketing fraternity.
The Board… pic.twitter.com/LQjU8wHmgs
— BCCI (@BCCI) February 19, 2025