Harbhajan Singh (Photo Credit: @ANI X)

ஜனவரி 20, புதுடெல்லி (New Delhi): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ரூபாய் 1800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் கும்பாபிஷேக பணிகளை தொடர்ந்து திறந்து வைக்கப்படுகிறது. இதற்காக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், மாநில வாரியாக அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், பிற அரசியல்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள், ராம பக்தர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அயோத்தி (Ayodhya Ram Mandir) சென்றுவர சிறப்பு இரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நேரில் வரவும் அழைப்பு கொடுக்கப்பட்டது. Thanjavur Accident: சாலைத்தடுப்பில் மோதி பயங்கர விபத்து; தஞ்சாவூரில் 4 பேர் உடல் நசுங்கி பலி.! 

நேரில் கலந்துகொண்டு ஆசிபெறவேண்டும்: இது குறித்து அவர் தெரிவிக்கையில், "அயோத்தியில் உள்ள ராமர் கோவில் சிலை நிறுவுதல் மற்றும் கும்பாபிஷேகம் வரலாற்று நாளாக இருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் பெரும் அளவில் வருகை தர வேண்டும். இந்திய மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசி பெற வேண்டும். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். அவர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவது என்பது பெரிய விஷயம். நான் கட்டாயம் கோவிலுக்கு செல்வேன்.

கோவில் திறப்பு விழா அரசியல் கிடையாது: கடவுள் மற்றும் பாரம்பரியம் மீது எனக்கு தீவிர நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு கோவிலும், மசூதியில், குருதுவாராவிலும் சென்று நான் வணங்குவேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்கு கட்டாயம் சென்று வருவேன். எனது வாழ்நாளில் இந்த கோவில் திறப்பு விழா நடைபெறுவது என்பது எனது அதிர்ஷ்டம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு எனது வாழ்த்துக்கள். அரசியல் நோக்கத்திற்காக பாஜக கோவில் விழாவை பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டினால் அது வேறு விஷயம். நடப்பது என்னவோ கோவில் திறப்பு விழா மட்டுமே: என்று தெரிவித்தார்.