Ellyse Perry | Danni Wyatt Hodge | Bowler Deandra Dottin (Photo Credit: @WomensCricZone / @RcbianOfficial / @WomensCricZone X)

பிப்ரவரி 27, பெங்களூர் (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டித்தொடரில், இன்று பெங்களுர் - குஜராத் அணிகள் மோதிக்கொள்கின்றன. இன்றைய ஆட்டத்தின் வெற்றிக்காக இரண்டு அணிகளும் போராடுவது, ரசிகர்களை இடையே பரபரப்பு சூழலை உண்டாக்கி இருக்கிறது. டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங் தேர்வு செய்ததால், பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. RCB Vs GG Toss Update: சொந்த மண்ணில் வெற்றிக்காக போராடும் ஆர்சிபி.. டாஸ் வென்று குஜராத் பௌலிங்.! 

அடுத்தடுத்து விக்கெட் இழப்பு:

இந்நிலையில், களத்தில் இருந்த டன்னி வாட் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டும் அடித்து, டி.தோட்டின் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் விக்கெட் இழந்து வெளியேறினார். அதனைத்தொடர்ந்து, எலிசி பெர்ரி ரன்கள் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை ஆஷ் பௌலிங்கில், தனுஜா கேட்ச் பிடித்து வீழ்த்தினார். இதனால் முதல் இரண்டு ஓவர்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட் காலியானது, பெங்களூர் அணியினர் இடையே அதிருப்தி சூழலை உண்டாக்கியது. எலிசி 4 பந்துகளில் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் வெளியேறினார்.

கேப்டன் விக்கெட் காலி:

அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தனுஜாவின் பந்தில் ஹெர்லீனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவர் 20 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் அடித்து வெளியேறினார். 6 ஓவரில் 3 விக்கெட் இழந்த பெங்களூர் அணி 26 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

டி.தோட்டின் அசத்தல் பௌலிங்:

பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், எலிசி முதல் முதலாக ஒரு ரன்கள் கூட எடுக்காமல் வெளியேறினார்:

எலிசி & பெர்ரி வெளியேற்றம்:

ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana Out) விக்கெட் இழப்பு: