
பிப்ரவரி 14, புதுடெல்லி (Sports News): பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா என 8 கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் 15 ஆட்டத்தில், இறுதியாக வெற்றிபெறும் அணி ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஐ கையில் ஏந்தும். நடப்பு தொடரை பாகிஸ்தான் முன்னெடுத்து நடத்தும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை காரணமாக, இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியா பங்கேற்கும்போட்டிகள் மட்டும் சவூதி அரேபியாவில் வைத்து நடைபெறுகிறது. கடந்த 1996ம் ஆண்டுக்கு பின்னர் 2025ம் ஆண்டில் பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நடைபெறுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டி, 2027ல் பெண்களுக்கான டி20 வகையிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. PAK Vs NZ: ஒருநாள் ட்ரை-சீரிஸ் இறுதிப்போட்டி: பாக்., - நியூசி அணிகள் மோதல்.. பேட்டிங் செய்த பாகிஸ்தான்.!
இந்திய அணி வீரர்கள் பட்டியல் (Team India Squad for Champions Trophy 2025):
சாம்பியன்ஸ் தொடருக்கான இந்திய தேசிய கிரிக்கெட் அணி (India’s squad for ICC Champions Trophy 2025), ரோஹித் சர்மாவின் (Rohit Sharma) தலைமையில் செயல்படும். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மன் ஹில் (Shubman Gill) துணை கேப்டனாக செயல்படுவார். அணியில் விராட் கோலி (Virat Kohli), ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer), கேஎல் ராகுல் (KL Rahul), ரிஷப் பண்ட் (Rishabh Pant), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), அக்சர் படேல் (Axer Patel), வாஷிங்க்டன் சுந்தர் (Washington Sundar), குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), ஹர்ஷித் ராணா (Hashit Rana), முகம்மத் சமி (Mohd Shami), அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Nishan Madushka: அரை சதம் விளாசிய கையுடன் விக்கெட்டை இழந்த மதுசுகா.. சிக்ஸ் லைனில் மாஸ் காட்டிய ஆடம் ஜாம்பா.!
பரிசுத்தொகை அறிவிப்பு:
இந்நிலையில், ஐசிசி நிர்வாகம் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. வெற்றிபெறும் அணிக்கு 2.24 (இந்திய மதிப்பில் ரூ. 19.45 கோடி) மில்லியன் அமெரிக்க டாலர் தொகை பரிசாக வழங்கப்படும். இரண்டாவது ரன்னராக தேர்வாகி தோல்வியரும் அணிக்கு 1.12 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 9.72 கோடி), அரையிறுதி போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 5.6 இலட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.4 கோடி) என மொத்தமாக 6.9 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4.87 கோடி) தொகை போட்டிக்காக செலவிடப்படும். ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ள அணிக்கு 350,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.4 கோடி), ஏழாவது மற்றும் எட்டாவதாக உள்ள அணிக்கு 140,000 (இந்திய மதிப்பில் ரூ.1.2 கோடி) அமெரிக்க டாலர் வழங்கப்படும். ஒவ்வொரு அணியும் வெற்றியின்போது 34,000 டாலரை (இந்திய மதிப்பில் ரூ.30 இலட்சம்) பரிசாக வெல்லும். இவ்வாறாக போட்டியில் பங்கேற்கும் அணிக்கு கட்டாயம் 125,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1 கோடி) என்பது வழங்கப்படும்.