Pakistan Vs New Zealand ODI Tri-Series Final 2025 (Photo Credit: @BLACKCAPS / @TheRealPCB X)

பிப்ரவரி 14, கராச்சி (Sports News): பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வந்த ஒருநாள் ட்ரை-சீரிஸ் 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று பாகிஸ்தான் - நியூசிலாந்து (Pakistan Vs New Zealand Cricket) அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி மோதிக்கொள்ளும் ஆட்டம், கராச்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இன்று மதியம் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது.

களமிறங்கவுள்ள நியூசிலாந்து - பாகிஸ்தான் வீரர்கள்:

நியூசிலாந்து அணியின் சார்பில் (New Zealand Squad PAK Vs NZ) வில் யங், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், ஜேக்கப் டஃபி, வில் ஓ'ரூர்க் ஆகியோர் விளையாடுகின்றனர். Nishan Madushka: அரை சதம் விளாசிய கையுடன் விக்கெட்டை இழந்த மதுசுகா.. சிக்ஸ் லைனில் மாஸ் காட்டிய ஆடம் ஜாம்பா.! 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் (Pakistan Squad for PAK Vs NZ) ஃபக்கர் ஜமான், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஃபஹீம் அஷ்ரப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் விளையாடுகின்றனர்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது: