IND Vs AUS CT 2025 (Photo Credit: @ICC X)

மார்ச் 04, துபாய் (Sports News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி முதல் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி பௌலிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டியில் பங்கேற்கும் என்பதால், வாழ்வா? சாவா? நிலையில் ஆட்டம் நடைபெறுகிறது. போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியும் சவாலான பௌலிங் நிலையை எதிர்கொண்டது. Varun Chakravarthy & Tarvis Head: வருண் அசத்தல் பந்துவீச்சு: டார்விஸ் ஹெட் விக்கெட் காலி.! 

ஆஸ்திரேலிய அணி ரன்கள் குவிப்பு:

ஆஸ்திரேலிய அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் 33 பந்துகளில் 39 ரன்கள், கூப்பர் 9 பந்துகளில் 0 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 96 பந்துகளில் 73 ரன்கள், மார்னஸ் 36 பந்துகளில் 29 ரன்கள், ஜோஷ் 12 பந்துகளில் 11 ரன்கள், அலெக்ஸ் கார்லே 57 பந்துகளில் 61 ரன்கள், பென் ட்வர்ஷுய்ஸ் 29 பந்துகளில் 19 ரன்கள், எல்லிஸ் 7 பந்துகளில் 10 ரன்கள், எல்லிஸ் 7 பந்துகளில் 10 ரன்களும்எடுத்திருந்தனர். மொத்தமாக 50 ஓவரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 264 ரன்கள் எடுத்தது. 10 விக்கெட்-டும் காலியானது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் ஆகியோர் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் உயர வழிவகை செய்தனர். பந்துவீச்சை பொறுத்தவரையில், இந்திய அணியின் சார்பில் விளையாடி ஷமி 3 விக்கெட், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட், ஜடேஜா 2 விக்கெட் எடுத்தனர்.

அடித்து விளையாடி வருண் சக்கரவர்த்தி பந்தில் விக்கெட் இழந்த டார்விஸ்:

ஸ்டீவ் ஸ்மித்-க்கு எண்டு கார்டு போட்ட ஷமி:

கிளன் மேக்ஸ்வெல்லை தூக்கிய அக்சர்:

2 விக்கெட் எடுத்து அசத்திய ஜடேஜா:

இந்திய அணிக்கு தலைவலியை தந்த விக்கெட் காலி: