Rohit Sharma (Photo Credit: @weRcricket / @Vipintiwari952 X)

மார்ச் 04, துபாய் (Sports News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி முதல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், இந்தியா - ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket) அணிகள் இடையே வாழ்வா? சாவா? நிலையில் ஆட்டம் நடந்து வருகிறது. Shubman Gill: 11 பந்துகளில் 8 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்த ஷுப்மன் ஹில்.. ரசிகர்கள் ஏமாற்றம்.! 

கில்-லைத் தொடர்ந்து ரோகித் அவுட்:

ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து, 50 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்தது. இதனால் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஷுப்மன் ஹில் 11 பந்துகளில் 8 ரன்கள் அடித்து, பென் ட்வர்ஷுய்ஸ் பந்துகளில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அவர் தனது விக்கெட்டை 5 வது ஓவரில் பறிகொடுத்தார். அதனைத்தொடர்ந்து, ரோஹித் சர்மா தனது 29 பந்துகளில் 28 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 7.5 வது ஓவரில், கூப்பரின் பந்துகளில் எல்பிடபிள்யு முறையில் விக்கெட் இழந்து ரோஹித் வெளியேறினார். இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

அடித்து விளாசி வெளியேறிய ரோஹித்: