Wiaan Mulder was Replaced in response to Brydon Carse (Photo Credit: @Cric_nzz X)

மார்ச் 06, ஹைதராபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 போட்டி (TATA IPL 2025), மார்ச் 22, 2025 முதல் தொடங்கி, மே 25, 2025 வரையில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு போட்டி, வார இறுதியில் டபுள் டமாகா என மொத்தமாக 10 அணிகள் 84 க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணிக்கு ஐபிஎல் 2025 போட்டியின் கோப்பை (IPL 2025 Champions Trophy) வழங்கப்படும். போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், அதன் தொடக்க ஏற்பாடு நிகழ்ச்சிகள் விறுவிறுப்புடன் நடைபெறவுள்ளன. 2025 ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மார்ச் 23, 2025 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ், மார்ச் 27, 2025 அன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மார்ச் 30, 2025 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே மோதுகிறது. மேற்கூறிய 3 ஆட்டத்தில் முதல் இரண்டு ஆட்டம் ஹைதராபாத் மைதானத்திலும், முன்றாவது ஆட்டம் விசாகப்பட்டினம் மைதானத்திலும் வைத்து நடைபெறுகிறது. IPL Schedule PDF Download: ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை பிடிஎப் பைல் பதிவிறக்கம் செய்வது எப்படி? விபரம் உள்ளே.! 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (Sun Risers Hyderabad Team in IPL 2025):

ஐபிஎல் 2025 தொடரில், எஸ்ஆர்எச் (SRH) அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அணியின் பயிற்சியாளராக கேனில் வேற்றோரி செயல்படுகிறார். சன் குழுமம் உரிமையாளராக இருக்கும் அணியின் தலைமை செயல் அதிகாரியாக காவியா மாறன் செயல்படுகிறார். கடந்த 2016ம் ஆண்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஐபில் தொடரில் வெற்றியாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 2018 மற்றும் 2024ல் இறுதி வரை போராடி தோற்றது. நடப்பு ஆண்டுக்கான தொடரில், ஹைதராபாத் அணியில் சச்சின் பேபி, டார்விஸ் ஹெட், அபினவ் மனோகர், அதர்வா டைடெ, அணிக்கெட் வர்மா, ஹென்றிச் காளீசன், இஷான் கிஷான், கமிடு மெண்டிஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் கும்மர் ரெட்டி, முகமது சமி, ஹர்சல் படேல், ஜெயதேவ் உடன்கட், பேட் கம்மின்ஸ், ப்ரைடன் கார்ஸ், சிமர்ஜீத் சிங், ஈசன் மலிங்கா, ஆடம் ஜாம்பா, ராகுல் சர்க்கார், ஜீசன் அன்சாரி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். IPL Schedule Full List in Tamil: டாடா ஐபிஎல் 2025 போட்டிகள்.. எந்த ஆட்டம் எப்போது? எங்கு? முழு விபரம் தமிழில் இதோ.! 

அணியில் மாற்றம்:

இந்நிலையில், அணியில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து அணியின் வீரர் ப்ரைடன் கார்ஸ் (Brydon Carse), விளையாட்டின்போது காயம் அடைந்தார். இதனால் அவர் மேற்படி விளையாட்டை தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்து, எஸ்.ஆர்.எச் அணி ஐபிஎல் ஏலத்தில் தக்க வைத்தது. இதனிடையே, அவர் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகுவதால், அவருக்கு பதிலாக ரூ.75 இலட்சம் மதிப்பில் எடுக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டின் வீரர் வியான் முல்டர் (WIaan Mulder)-ஐ அணியில் தக்க வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்டர் 11 டி20 ஆட்டங்கள், 18 டெஸ்ட் கிரிக்கெட், 25 ஒருநாள் தொடர்களை விளையாடி இருக்கிறார். அவர் 60 விக்கெட்டுகளை காப்பாற்றி, 970 ரன்களை மொத்தமாக அடித்துள்ளார்.