
மார்ச் 02, துபாய் (Cricket News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியின் இறுதி தகுதி ஆட்டம், இன்று துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs New Zealand National Cricket Team Timeline) இடையே நடைபெறுகிறது. நண்பகல் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்டனர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும். தோல்வியுறும் அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளும். India Vs New Zealand: இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம்.. வெற்றி யாருக்கு சாதகம்? நேரலை பார்ப்பது எப்படி?
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல் (India Vs New Zealand Cricket):
கடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள், இன்றைய போட்டியிலும் வெற்றி அடைந்து, சாம்பியன்ஸ் டிராபி குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை தக்கவைக்க பலபரீட்சை நடத்துகிறது. இன்று விராட் கோலிக்கு 300 வது ஒருநாள் போட்டி ஆகும். இன்று நியூசிலாந்து அணியின் (New Zealand Squad) சார்பில் டபிள்யூ யங், கே வில்லியம்சன், ஆர் ரவீந்திரா, டி மிட்செல், டி லாதம், ஜி பிலிப்ஸ், எம் பிரேஸ்வெல், எம் சான்ட்னர், கே ஜேமிசன், எம் ஹென்றி, டபிள்யூ ஓ'ரூர்க் ஆகியோர் விளையாடுகின்றனர். இந்திய அணியின் (Team India Squad) சார்பில் ஆர் ஷர்மா, எஸ் கில், வி கோஹ்லி, சீனியர் கிஷோர், கே ராகுல், எஸ்.பாண்டியா, ஆர்.ஜடேஜா, கே.படேல், கே.யாதவ், எம். ஷமி, வி.சக்ரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.
இந்திய அணியின் சார்பில் இன்று களமிறங்கும் வீரர்கள்:
Your #TeamIndia to face New Zealand 💪
Updates ▶️ https://t.co/Ba4AY30p5i#NZvIND | #ChampionsTrophy pic.twitter.com/JidmjdEU28
— BCCI (@BCCI) March 2, 2025