
மார்ச் 02, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியின் இறுதிக்கட்டம் இன்று நடைபெறுகிறது. அரையிறுதி தகுதி சுற்றுகள் கொண்ட ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா அணிகள் தேர்வு பெற்றுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் நியூசிலாந்து, இந்தியா அணிகளும், குரூப் 'பி' பிரிவில் தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இறுதியாக நாளை நியூசிலாந்து - இந்தியா கிரிக்கெட் அணிகள் (IND Vs NZ Cricket) மோதும் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியின் வெற்றி/தோல்வியை பொறுத்து, அரையிறுதியில் மோதிக்கொள்ளும் அணிகளில் மாற்றம் இருக்கும். ENG Vs SA Highlights: ஹென்ரிச், ரஸீ அசத்தல் ஆட்டம்.. தென்னாபிரிக்க அணி த்ரில் வெற்றி.. இங்கிலாந்துக்கு மரணபீதி காண்பித்த இறுதி சம்பவம்.!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் (India Vs New Zealand Cricket) மோதல்:
அந்த வகையில், இன்று துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs New Zealand National Cricket Team Timeline) இடையே நடைபெறுகிறது. நண்பகல் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தின் போது வெப்பநிலை பகலில் 23 டிகிரி செல்ஸியஸ், இரவில் 18 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் இருக்கும். வானிலை வறண்டு காணப்படும் என்பதால், மழைக்ன வாய்ப்புகள் இல்லை. காற்றின் வேகம் 18 மணிக்கு கிமீ என்ற நிலையில் இருக்கும். போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, தமிழ் மொழியில் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்திலும் நேரலையை காணலாம். Semi Finalists of the Champions Trophy 2025: ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா; ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனலிஸ்ட் லிஸ்ட் இதோ.!
இந்தியா & நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:
ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer), சப்மன் கில் (Shubman Gill), விராட் கோலி (Virat kohli), அக்சர் படேல் (Axar Patel), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), வாஷிங்க்டன் சுந்தர் (Washington Sundar), கேஎல் ராகுல் (KL Rahul), ரிஷப் பண்ட் (Rishabh Pant), அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), ஹர்ஷித் ராணா (Harshit Rana), குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), முகமது ஷமி (Mohammad Shami), வருண் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா (Rohit Sharma) அணியை வழிநடத்துகிறார். மிட்செல் சான்டநெர் (Mitchell Santner) தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் (New Zealand Team Squad for ICC Champions Trophy 2025), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, கைல் ஜேமீசன், டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ராச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா வெற்றி / தோல்வி அடைந்தால், அரையிறுதி போட்டியில் ஏற்படும்:
Australia and South Africa will eagerly follow the #NZvIND clash in the final group-stage encounter of the #ChampionsTrophy to know their respective semi-final opponents 🏏
More ➡https://t.co/ZtcX0vnunQ pic.twitter.com/VHnXugHTqn
— ICC (@ICC) March 1, 2025