Rohit Sharma & Virat Kohli (Photo Credit: @BCCI X)

பிப்ரவரி 20, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வங்கதேசம் தேசிய கிரிக்கெட் அணி இடையே, துபாயில் நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஹொசைன் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள், ஆட்டத்தின் முடிவில் 228 ரன்கள் எடுத்தது. இதனால் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வீரர்கள் ரோஹித் சர்மா, முகமது ஷமி ஆகியோர் சாதனை படைத்தனர். அதேபோல, இன்று நடைபெறும் போட்டி, ரவீந்திர ஜடேஜாவின் 200 வது ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது. IND Vs BAN: லட்டு கேட்ச்களை கோட்டை விட்ட இந்தியா.. அதிரடியாக ரன்கள் குவித்த வங்கதேசம்.. 229 ரன்கள் இலக்கு.! 

ஒருநாள் போட்டியில் மைல் கல் (Most ODI Runs by Players and Matches):

இந்திய அணியின் சார்பில் விளையாடிய ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டியில் 11000 ரன்கள் குவித்தார். அவர் தனது 261 வது ஒருநாள் போட்டியில், 11000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் 11000 ரன்களை கடந்த நான்காவது வீரர், உலகளவில் 10 வது வீரர் என்ற பெருமையையும் ரோஹித் தக்க வைக்கிறார். அதேபோல, 11000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 222 போட்டிகள், ரோஹித் சர்மா 261 போட்டிகள், சச்சின் 276 போட்டிகள், ரிக்கி பாண்டிங் 286 போட்டிகள், சவுரவ் கங்குலி 288 போட்டிகளில் பங்கேற்று 11000 ரன்களை கடந்து இருக்கின்றனர். சவுரவ் கங்குலி 11363 ரன்கள், சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி 18246 ரன்கள், இலங்கை அணியின் சங்கரகரா 404 போட்டிகளில் விளையாடி 14234 ரன்கள் அதிகபட்சமாக ஓர்நாள் போட்டியில் எடுத்துள்ளனர். இதில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் இன்னும் 37 ரன்கள் அடித்தால், அவர் 14000 ரன்களை கடந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, முகமது ஷமி ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தி இருக்கிறார்.

11000 ரன்களை கடந்து ரோஹித் சர்மா (Rohit Sharma ODI Runs) சாதனை:

200 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி சாதனை:

ஒருநாள் போட்டியில் 11000 ரன்களை கடந்த ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ பாராட்டு:

இந்தியா - வங்கதேசம் போட்டியில், முகம்மது ஷமி (Mohammad Shami) இன்று ஒரேநாளில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்: