IND Vs BAN | ICC Champions Trophy 2025 | Match 2 (Photo Credit: @BCCI X)

பிப்ரவரி 20, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியின் இரண்டாவது ஆட்டம், துபாயில் இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வங்கதேசம் தேசிய கிரிக்கெட் அணி (India Vs Bangladesh Cricket) இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஹுசைன் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். தமிழ் மொழியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) சேனலியிலும் போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. Soumya Sarkar & Najmul Hossain Wicket: 2 ஓவரில் 2 ரன்கள், 2 விக்கெட் லாஸ்.. தடுமாறும் வங்கதேசம்.! 

தடுமாறி உயர்ந்த வங்கதேச அணி:

போட்டியின் தொடக்கத்தில் சௌம்யா, நஜ்மல், ஹாசன், ரஹீம் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறினர். டி.ஹாசன் 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து, களத்தில் இருந்த தாஹ்வித், ஜாக்கர் அலி ஆகியோர் நின்று ஆடி அணியை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 168 ரன்கள் மொத்தமாக எடுத்திருந்தனர். தாஹ்வித் 118 பந்துகளில் 100 ரன்கள் அடித்து, சதம் அடித்து விளாசினார். அலி 114 பந்தில் 68 ரன்கள் எடுத்திருந்தார். முதல் 10 ஓவரில் ஐந்து விக்கெட்டை இழந்த வங்கதேச அணி தடுமாறிய நிலையில், இருபதாவது ஓவருக்கு பின்னர் தனது அதிரடி செயல்பாடு மற்றும் நின்று ஆடும் திறன் போன்றவற்றை வெளிப்படுத்தி அணியின் ரன்களை வங்கதேச அணியினர் உயர்த்தி இருந்தனர். Rohit Sharma Apology: கேட்சை தவறவிட்டு, குழந்தை போல மன்னிப்பு கேட்ட ரோஹித் சர்மா.. நெகிழவைக்கும் வீடியோ.!

இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு:

49.4 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்த வங்கதேச அணி, 228 ரன்கள் குவித்தது. இதனால் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பந்துவீசி முகமது சமி ஐந்து விக்கெட், ராணா 3 விக்கெட், அக்சர் படேல் 2 விக்கெட் எடுத்து அசத்தியிருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சு முதலில் சிறப்பாக அமைந்தாலும், பின் கைக்கு வந்து கேட்ச்களை பறிகொடுத்து அதிர்ச்சி தந்தனர். தொடக்கத்தில் வங்கதேச அணி 100 ரன்கள் அல்லது 150 ரன்கள் எடுக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அலி மற்றும் தவ்ஹீத் ஆகியோரின் ஆட்டம் போட்டியின் தன்மையை மாற்றியது. Axar Patel: அடுத்தடுத்து 2 விக்கெட் எடுத்த அக்சர் படேல்.. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல்.! 

228 ரன்னுக்கு வங்கதேசம் அணி ஆல் அவுட் (IND Vs ENG Cricket ICC Champions Trophy 2025):

ஒருநாள் போட்டித்தொடரில் முகம்மது ஷமி (Mohd. Shami) 200 விக்கெட் எடுத்து சாதனை:

தாவ்ஹித் ஹ்ரிடோய் (Tawhid Hridoy Centaury) 100 ரன்கள் அடித்து அசத்தல்:

ஷமியின் பந்துவீச்சு, கோலியின் கேட்ச்:

ஹாட்ரிக் விக்கெட்டுக்கு நடந்த முயற்சியில் தோல்வி:

முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்திய ஷமி: