
மார்ச் 02, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், 12 வது ஆட்டத்தில் இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (IND Vs NZ Cricket) அணிகள் மோதியது. துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த காரணத்தால், இந்திய அணி பேட்டிங் செய்தது. கிட்டத்தட்ட 150 பந்துகள் இந்திய அணியால் ரன்கள் எதையும் எடுக்க முடியாத நிலை இருந்தது. ஏனெனில், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டரிங் இன்று சிறப்பாக இருந்தது. தொடக்கத்தில் களமிறங்கிய ஷுப்மன் ஹில், 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். மேத் ஹென்றி வீசிய பந்தில், 2.5 வது ஓவரில் எல்பிடபிள்யு முறையில் விக்கெட் இழந்து அவர் வெளியேறினார். பின் களத்தில் இருந்த ரோஹித் சர்மா (Rohit Sharma), 17 பந்துகளை 15 ரன்கள் அடித்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். 5.1 வது ஓவரில் கைல் ஜெமிசன் பந்தை எதிர்கொண்டபோது, வில் யங் கேட்ச் பிடித்து விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலி 14 பந்துகளில் 11 ரன்கள் அடித்து, 6.4 வது ஓவரில் 14 வது பந்தை எதிர்கொண்டபோது, ஹென்றி வீசிய பந்தில் கிளன் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிலிப்ஸ் வானில் தாவி மாயாஜாலம் செய்து விக்கெட் எடுத்தார். அவர் கேட்ச் பிடித்தார் என்பதை முதலில் அவராலும், பின் கோலி-யாலும் நம்ப இயலவில்லை. Glenn Phillips Flying Catches Video: கிரிக்கெட்டரா? சூப்பர் மேனா? தாவிப்பிடித்த கேட்ச்.. விராட் கோலியே மிரண்டுபோன சம்பவம்.! குவியும் பாராட்டு.!
நியூசிலாந்து அணிக்கு 250 ரன்கள் இலக்கு:
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas iyer) 98 பந்துகளில் 79 ரன்கள், அக்சர் படேல் (Axar Patel) 61 பந்துகளில் 42 ரன்கள், கேஎல் ராகுல் (KL Rahul) 29 பந்துகளில் 23 ரன்கள், ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) 45 பந்துகளில் 45 ரன்கள், ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 20 பந்துகளில் 16 ரன்கள் அதிகபட்சமாக அடித்து அவுட்டாகி வெளியேறினர். 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்த இந்திய கிரிக்கெட் அணி 249 ரன்கள் குவித்தது. இதனால் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கவுள்ளது. கிட்டத்தட்ட 150 பந்துகளை இந்தியா எதிர்கொண்டு எந்த ரன்களும் எடுக்கவில்லை. நடப்பு தொடரில் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி 151 பந்துகளில் ரன்கள் எடுக்காமல் இருந்ததைப்போல, இந்தியாவும் அதே நிலையை இன்றைய ஆட்டத்தில் எதிர்கொண்டுள்ளது. நியூசிலாந்து அணியின் சுரப்பில் பந்துவீசியவர்கள் மேத் ஹென்றி (Matt Henry) 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கைல், வில், மிட்செல், ரசின் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
ஷ்ரேயஸ் ஐயர் அசத்தல் பேட்டிங்:
Shreyas Iyer helped India recover with a fighting knock 👊#NZvIND #ChampionsTrophy
Catch this live now on @StarSportsIndia
Here's how to watch in your territory ➡️ https://t.co/S0poKnxpTX pic.twitter.com/iYGtPne0Tc
— ICC (@ICC) March 2, 2025