ICC Champions Trophy 2025 | IND Vs NZ (Photo Credit: @BCCI X)

மார்ச் 09, துபாய் (Sports News): ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியை, பாகிஸ்தான் நாடு தலைமையேற்று நடத்தியது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில், இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணி இறுதி போட்டிக்கு தேர்வானது. இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி மோதிக்கொண்ட ஆட்டம் (India National Cricket Team Vs New Zealand National Cricket Team), துபாய் நாட்டில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இன்று (09 மார்ச் 2025) மதியம் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. பாகிஸ்தான் தலைமையேற்று போட்டித் தொடரை நடத்தினாலும், இந்தியா தனது வீரர்களை பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு அனுப்ப இயலாது என தெரிவித்த காரணத்தால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு இந்தியா தேர்வானதால், பாகிஸ்தானில் நடக்க வேண்டிய ஆட்டம், துபாயில் நடந்து வருகிறது. Rohit Sharma: ஹிட்மேன் விக்கெட் காலி.. சதம் நோக்கிய பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ரச்சின்.! 

இந்தியா எதிர் நியூசிலாந்து (India Vs New Zealand Cricket):

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் வில் யங் (Will Young) 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். முக்கிய பேட்டர்களான ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) 29 பந்துகளில் 37 ரன்கள் அடித்து, குல்தீப்சின் பந்துகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். அதேபோல, கேன் வில்லியம்சன் (Kane Williamson) 14 பந்துகளில் 11 ரன்கள் அடித்து, கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். ரவீந்திர ஜடேஜாவின் பந்துகளில் எல்பிடபிள்யு முறையில் டாம் லேதம் விக்கெட் பறிபோனது. கிளன் பிலிப்ஸ் 52 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து விக்கெட் எடுத்து வெளியேறினார். டாரில் மிச்செல் 101 பந்துகளில் 63 ரன்கள் அடித்து இருந்தார். அரை சதம் கடந்து தொடர்ந்து விளையாடி வந்தவர், 45.4 வது ஓவரில், முகமது ஷமியின் பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். சான்டனர் 8 பந்துகளில் 10 ரன்னும், மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில் 53 ரன்னும் அடித்து இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 251 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. IND Vs NZ Cricket: மாஸ் காட்டிய இந்தியா.. திணறி இறுதியில் மரணகாட்டு காண்பித்த நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு.! 

இந்தியா - நியூசிலாந்து (India Vs New Zealand Cricket Highlighs):

இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் ரோஹித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள், எஸ். ஹில் 50 பந்துகளில் 31 ரன்கள், விராட் கோலி 2 ரன்கள் 1 ரன்கள், எஸ். ஐயர் 62 பந்துகளில் 28 ரன்கள் அடித்து இருந்தனர். ரோஹித் சர்மா ரச்சின் ரவீந்திராவின் பந்துகளில் அவுட் ஆகினார். ஹில் கிளன் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கோலி வந்த வேகத்தில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார். ஷ்ரேயஸ் ரவீந்திராவின் கையில் கேட்ச் கொடுத்தார். அக்சர் படேல் 40 பந்துகளில் 29 ரன்கள் அடித்து, மைக்கேல் பந்தில், வில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 18 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். கே.எல் ராகுல் 34 பந்துகளில் 33 ரன்னும், ஜடேஜா 6 பந்துகளில் 9 ரன்னும் அடித்தனர். போட்டியின் முடிவில் இந்திய அணி திரில் வெற்றி அடைந்தது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நியூஸிலாந்திடம் இறுதிப்போட்டியில் தோற்ற இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி அடைந்து பழைய கணக்கை தீர்த்துக்கொண்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 வது ஐசிசி போட்டியை வெற்றி கண்டு இருக்கிறது. இறுதி வரை போராடிய நியூசிலாந்து அணி ரன்னர் பட்டத்தை பெற்றுள்ளது.

வருண் சக்கரவர்த்தியின் அசத்தல் பந்துவீச்சு:

ரோகித் சர்மா அசத்தல் பேட்டிங்:

சூப்பர்மேன் போல தாவி விக்கெட் எடுத்த கிளன் பிலிப்ஸ்:

109 மீட்டர் சிக்ஸ் அடித்த ஷ்ரேயஸ் ஐயர்:

வருண் சக்கரவர்த்தியின் அசத்தல் பந்துவீச்சு:

தனது ஸ்டைலில் வெற்றிவாகை சூடிய ரவீந்திர ஜடேஜா: