
மார்ச் 09, துபாய் (Cricket News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் (ICC Champions Trophy 2025 Final), இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India Vs New Zealand Cricket) மோதும் ஆட்டம் நடைப்பெட்டது. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்செல் சான்டனர், பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி பௌலிங் செய்தது. இரண்டு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்ற முனைப்புடன் விளையாடியது. Glenn Phillips: சக்கரவர்த்தியின் பந்தில் வீழ்ந்த கிளன் பிலிப்ஸ்.. 34 பந்துகளில் போல்ட் அவுட்.!
அதிரடியாக ரன்கள் குவித்த நியூசிலாந்து:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் வில் யங் (Will Young) 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். முக்கிய பேட்டர்களான ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) 29 பந்துகளில் 37 ரன்கள் அடித்து, குல்தீப்சின் பந்துகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். அதேபோல, கேன் வில்லியம்சன் (Kane Williamson) 14 பந்துகளில் 11 ரன்கள் அடித்து, கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். ரவீந்திர ஜடேஜாவின் பந்துகளில் எல்பிடபிள்யு முறையில் டாம் லேதம் விக்கெட் பறிபோனது. கிளன் பிலிப்ஸ் 52 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து விக்கெட் எடுத்து வெளியேறினார். Tom Latham: ஜடேஜாவின் சூழலில் சிக்கிய டாம் லேதம்; 14 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி.!
இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு:
இறுதிக்கட்டத்தில் களத்தில் இருந்த டாரில் மிச்செல் 101 பந்துகளில் 63 ரன்கள் அடித்து இருந்தார். அரை சதம் கடந்து தொடர்ந்து விளையாடி வந்தவர், 45.4 வது ஓவரில், முகமது ஷமியின் பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். சான்டனர் 8 பந்துகளில் 10 ரன்னும், மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில் 53 ரன்னும் அடித்து இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 251 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 252 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் வருண், குல்தீப் தலா 2 விக்கெட்டுகள், ஜடேஜா, ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயம்:
TARGET SET 🎯#TeamIndia's spin twins Kuldeep-Varun stepped up in the Final! An exciting run-chase loading... 🔥#ChampionsTrophyOnJioStar FINAL 👉 #INDvNZ | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports18-1!
📺📱 Star watching FREE on JioHotstar:… pic.twitter.com/8pHEZmry05
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025
252 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி:
Innings Break!
Clinical bowling effort from #TeamIndia bowlers as they restrict New Zealand to a total of 251/7 in the Finals of the Champions Trophy!
Scorecard - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/F4WmHJ4wJR
— BCCI (@BCCI) March 9, 2025