
மார்ச் 04, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி முதல் போட்டி என்பதால், இதில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டிக்கு செல்லும். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று வாழ்வா? சாவா? நிலையில் போட்டி நடைபெறுகிறது. Virat & Rohit Anger with Kuldeep: பந்தை பிடிக்க தவறவிட்ட குல்தீப்... கடிந்துகொண்ட விராட் கோலி & ரோஹித் சர்மா.!
போட்டியை நேரில் பார்த்த சிம்பு:
போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 264 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 265 ரன்கள் இலக்கு நோக்கி பயணித்து வருகிறது. இந்திய அணி வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் வெற்றிக்காக முனைப்புடன் விளையாடுகிறது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிம்பு, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை நேராக துபாய் கிரிக்கெட் மைதானத்தில் கண்டு ரசித்தார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்தனர்.
சிம்பு இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியை நேரில் கண்ட காட்சி:
Thalaivan is watching #INDIAAUSTRALIA match now!#SilambarasanTR pic.twitter.com/k1IkZJHgKE
— Silambarasan TR Spotlight (@STR_Spotlight) March 4, 2025