மார்ச் 04, துபாய் (Sports News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி முதல் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து, இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைய 265 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியும் களமிறங்கி விளையாடி வருகிறது. Rohit Sharma: எல்.பி.டபிள்யுவில் வெளியேறிய ரோஹித்.. ரிவியூ எடுத்தும் விக்கெட் போன சோகம்.!  

குல்தீப்புக்கு கண்டிப்பு:

இந்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சின் போது களத்தில் ஆஸ்திரேலிய அணியின் சார்பில் காரே - ஸ்மித் ஜோடி இருந்தது. இருவரும் 15 பந்துகளில் 13 ரன்கள், ஸ்மித் 86 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து இருந்தனர். 31.5 வது ஓவரில் குல்தீப் தனது 4 வது ஓவர் பந்துவீச்சை வீசி இருந்தார். பந்தை எதிர்கொண்ட காரே அடித்தபோது, அதனை இந்திய வீரர்கள் பிடித்து குல்தீபிடம் போட்டனர். அப்போது, குல்தீப் பந்தை பிடிக்கத் தவறவே, ஆத்திரமடைந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என இருவரும் அடுத்தடுத்து குல்தீப்-ஐ கடிந்துகொண்டனர்.

ரோஹித் மற்றும் விராட் குல்தீப்பை கண்டித்த காணொளி: