ENG Vs SA | ICC Champions Trophy 2025 (Photo Credit: @ICC / @ProteasMenCSA X)

மார்ச் 01, கராச்சி (Cricket News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடரில், 10 வது ஆட்டம் இன்று இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (England National Cricket Team Vs South Africa National Cricket Team)-களுக்கு இடையே, பாகிஸ்தானில் உள்ள கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நண்பகல் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்கள், தடுமாறிய ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ரன்கள் குவிக்க இயலாமல் திணறிப்போனது. 38.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்த இங்கிலாது அணி 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடிய பென் டக்கர் 21 பந்துகளில் 24 ரன்னும், ஜோ ரூட் 44 பந்துகளில் 37 ரன்னும், ஹேரி புரூக் 19 பந்துகளில் 29 ரன்னும், ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 21 ரன்னும், ஜோப்ரா 31 பந்துகளில் 25 ரன்னும் அடித்து இருந்தனர். முதல் ஓவரில் தொடங்கிய தடுமாற்றம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க வைத்தது. தென்னாபிரிக்க அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் மார்கோ 3 விக்கெட்டுகள், வியான் 3 விக்கெட்கள், கேஷவ் 2 விக்கெட்டுகள் அதிகபட்சமாக கைப்பற்றி இருந்தனர். இதனால் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. Semi Finalists of the Champions Trophy 2025: ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா; ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனலிஸ்ட் லிஸ்ட் இதோ.! 

தென்னாபிரிக்க அணி திரில் வெற்றி:

50 ஓவரில் 179 ரன்கள் எடுத்தால் போதும் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ராயன் 25 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். ரசி வான் (Rassie Van Der Dussen) 87 பந்துகளில் 72 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஹென்றிச் காளீசன் 56 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இதனால் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 29.1 ஓவர் முடிவில் தனது இலக்கை நெருங்கி 7 விக்கெட் வித்தியாசத்தில் 181 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இங்கிலாந்து ஆணின் சார்பில் பந்து வீசியவர்களில் ஜோப்ரா 2 விக்கெட் வீழ்த்தினார். போட்டியின் வெற்றி வாயிலாக தென்னாபிரிக்க அணி, ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் கிரிக்கெட்டில் கோலோச்சி இருந்த இங்கிலாந்து, இன்றளவில் பல போட்டிகளில் சரிவுகளை சந்தித்து வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து, இன்று கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி அடைந்து வருவது, அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களையும் வருத்தமடைய வைக்கும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. ENG Vs SA: இங்கிலாந்துக்கு மிகப்பெரிய இழப்பு.. 179 ரன்களுக்கு ஆல் அவுட்.!

தென்னாபிரிக்க அணி இன்றைய போட்டியில் வெற்றி:

ஜோப்ரா ஆர்ச்சர் விக்கெட் வீழ்த்திய காணொளி:

அரையிறுதிக்கு தேர்வாகியுள்ள அணியின் விபரங்கள்: