பிப்ரவரி 23, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டி, பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) மோதிக்கொள்ளும் ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium, Dubai) வைத்து, மதியம் 02:30 மணிமுதல் தொடங்கி நடைபெறுகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி பௌலிங் செய்து வருகிறது. 8 ஓவரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 40 ரன்கள் சேகரித்துள்ளது. ஆட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
முதல் ஓவரில் ஷமி பயங்கர சொதப்பல் (Mohammad Shami Wide Balls Today):
இந்நிலையில், முகம்மது ஷமி தான் வீசிய முதல் ஓவரிலேயே மிகப்பெரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டார். அவர் முதல் ஓவரில் வீசிய 6 பந்துகளில் 5 அகலப்பந்து என்ற முறையில், மொத்தமாக அவர் முதல் ஓவரில் 6 பந்துக்கு பதிலாக 11 பந்துகளை வீசினார். இந்திய பௌலர்களில் மிகப்பிரபலமான வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, பந்துவீச்சில் மிகப்பெரிய ஆற்றல் கொண்டவர் ஆவார். அவர் முந்தைய காலங்களில் பல சாதனைகளை படைத்து இருக்கிறார். சமீபத்தில் தான் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை மொத்தமாக வீழ்த்தி அசத்தி இருந்தார். இதனிடையே, இன்றைய நாளில் ஆட்டத்தின் தொடக்கம், நாடுகளை தாண்டி கிரிக்கெட்டை ரசிக்கும் பலருக்கும் அதிர்ச்சி தரும் வண்ணம் இருந்தது. IND Vs PAK Toss Update: இந்தியா Vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று பாக்., அணி பேட்டிங் தேர்வு..!
முந்தைய அகலப்பந்து வரலாறு:
1998ல் இருந்து, இதுநாள் வரை நடைபெற்றுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy) தொடர்களில், ஷமி இன்றைய பந்துவீச்சினால் மிகமோசமான சாதனைகளை படைத்தது இருக்கிறார். அதாவது, ஒரு ஓவரில் அதிக பந்துகளை வீசிய வீரர்களின் பட்டியலில், அவர் முதல் மூன்று இடத்திற்குள் வந்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு ஹசிபுல் ஹொசைன் (Hasibul Hossain) ஒரு ஓவரில் 13 பந்துகளை வீசினார். 2004ல் தினஸே பயங்கரா (Tinashe Panyangara) 13 பந்துகளை வீசினார். முகமது ஷமி (Mohammad Shami) இன்று 11 பந்துகளை வீசினார். கடந்த 2000ம் ஆண்டு சாமுண்டா வாஸ் (Chaminda Vaas) 10 பந்துகளை ஓவரில் வீசினார் என்பது முந்தைய வரலாறு ஆகும்.
ஒரு ஓவரில் 5 பந்துகளை கூடுதலாக வீசிய முகமது ஷமி (Mohammad Shami Worst Bowling):
Mohammad Shami in the first over of the innings.
What's going on?#ChampionsTrophy #INDvPAK pic.twitter.com/HVqtrdtC7T
— 𝘒𝘏𝘈𝘓𝘐𝘋🇧🇩 (@Khalid_bd_) February 23, 2025
முகமது ஷமி (Mohammad Shami Wide Balls) மிகப்பெரிய அளவில் பதற்றத்தை எதிர்கொண்டுள்ளார்:
Mohammad Shami is struggling big time!#INDvsPAK pic.twitter.com/qcu2curxYm
— Parth Sanghvi (@ParthSanghvi26) February 23, 2025
முதல் ஓவரிலேயே 5 அகலப்பந்து வீசி அதிர்ச்சி கொடுத்த ஷமி:
Mohammad Shami Today.
5 wide balls 🤦🏻♂️
#INDvsPAK pic.twitter.com/xIHYjDhmlK
— 👑Che_ಕೃಷ್ಣ🇮🇳💛❤️ (@ChekrishnaCk) February 23, 2025