Hardik Pandya Watch (Photo Credit: @BCCI / @SSVerma22439706 X)

பிப்ரவரி 23, துபாய் (Sports News): பாகிஸ்தான் நாட்டில் 29 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) மோதிக்கொள்ளும் ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium, Dubai) வைத்து நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்து, 49.4 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது. IND Vs PAK: பந்துவீச்சில் அசத்திய இந்தியா.. டப் கொடுத்த பாகிஸ்தான்.. இந்திய கிரிக்கெட் அணிக்கு 242 ரன்கள் இலக்கு.! 

இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு?

இதனிடையே, போட்டியில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) கைகளில் கடிகாரம் ஒன்றை கட்டி இருந்தார். இந்த கடிகாரம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஹர்திக் பாண்டியா கட்டியிருந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.7 கோடி மதிப்பு என்றும், அவர் விலையுயர்ந்த கடிகாரத்தை கட்டி விளையாட வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிச்சர்ட் மில்லி ஆர்.எம் 27 - 02 ரபேல் நடால் (Richard Mille RM 27-02 Tourbillon Rafael Nadal) எனப்படும் சிறப்பு ரக கடிகாரத்தை அவர் அணிந்ததாக சொல்லப்படுகிறது. ரபேல் நடால் ரக கடிகாரம் சந்தையில் ரூ.7 கோடி மதிப்பு முதல் ரூ.15 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.7 கோடி மதிப்புள்ள கடிகாரத்துடன் ஹர்திக் (Hardik Pandya Watch):