பிப்ரவரி 23, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) மோதிக்கொள்ளும் ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium, Dubai) வைத்து, மதியம் 02:30 மணிமுதல் தொடங்கி நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்து, 49.4 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் அடித்தது. MS Dhoni Watching Live IND Vs PAK: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் பார்க்கும் எம்எஸ் தோனி & சன்னி டியோல்.! 

பாகிஸ்தான் அணி 241 ரன்கள் குவிப்பு:

பாகிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் இமாம் உல் ஹஹ் 26 பந்துகளில் 10 ரன்கள், பாபர் அசாம் 26 பந்துகளில் 22 ரன்கள், சவுத் ஷகீல் 76 பந்துகளில் 62 ரன்கள், முகமது ரிஸ்வான் 77 பந்துகளில் 46 ரன்கள், சல்மான் ஆகா 24 பந்துகளில் 19 ரன்கள், தையப் தாகீர் 6 பந்துகளில் 4 ரன்கள், குஷத்தில் ஷா 39 பந்துகளில் 38 ரன்கள், நசீம் ஷா 16 பந்துகளில் 14 ரன்கள் அடித்து இருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 10 விக்கெட் இழந்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. தொடக்கத்தில் 10 ஓவருக்குள் 2 விக்கெட் இழந்த நிலையில், பின் 33 வது ஓவருக்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனது. Hardik Pandya & Axar Patel: ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் அசத்தல்.. பாபர், இமாம் விக்கெட் வீழ்த்தி அசத்தல்.! 

பந்துவீச்சில் அசத்திய இந்தியா:

இந்திய அணியின் சார்பில் பந்துவீசிய வீரர்களில் முகமது ஷமி 8 ஓவர் வீசி 43 ரன்கள், ஹர்ஷித் ராணா 7.4 ஓவர் வீசி 30 ரன்கள், ஹர்திக் பாண்டியா 8 ஓவர்கள் வீசி 31 ரன்கள், அக்சர் படேல் 10 ஓவர் வீசி 49 ரன்கள், குல்தீப் யாதவ் 9 ஓவர் வீசி 40 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 7 ஓவர்கள் வீசி 40 ரன்கள் அடிக்க இடம் கொடுத்து இருந்தனர். இதில் குல்தீப் 3 விக்கெட்டுகள், ஹர்திக் 2 விக்கெட்டுகள், அக்சர், ஜடேஜா, ஹர்ஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தனர். 2 விக்கெட்டுகள் ரன் அவுட்டில் பறிபோனது. இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளும் சரிசமமான பலத்தினை வெளிப்படுத்தி திறமையை வெளிப்படுத்தி இருந்தது.

சர்வதேச அளவிலான போட்டிகளில், 200 விக்கெட் வீழ்த்தி ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) அசத்தல்:

ஹர்திக் பாண்டியா பந்தில் பாபர் அசாம் விக்கெட் எடுக்கப்பட்டபோது:

அக்சர் படேலின் அதிரடியால் இமாம் உல் ஹஹ் விக்கெட் பறிபோனது:

அக்சர் படேல் முகமது ரிஸ்வானின் விக்கெட் எடுத்த காட்சி:

ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் பறிபோன விக்கெட்:

ஜடேஜாவின் ஸ்பின் பால் தையப்பின் விக்கெட்டை காலி செய்த காட்சி:

சவுத் ஷகீல் 50 ரன்கள் அடித்து அசத்தல்:

பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், உல் ஹஹ் ஆகியோரின் விக்கெட் எடுக்கப்பட்ட காட்சிகள்: