Virat Kohli (Photo Credit: @BCCI / @CricCrazyJohns X)

பிப்ரவரி 23, துபாய் (Sports News): பாகிஸ்தான் நாட்டில் 29 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) மோதிக்கொள்ளும் ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium, Dubai) வைத்து நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்து, 49.4 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது. IND Vs PAK: பந்துவீச்சில் அசத்திய இந்தியா.. டப் கொடுத்த பாகிஸ்தான்.. இந்திய கிரிக்கெட் அணிக்கு 242 ரன்கள் இலக்கு.! 

ஒரே ஆட்டத்தில் மாபெரும் இரண்டு சாதனைகள் (Virat Kohli ODI Catches & 14000 Runs Achievements):

இந்நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 14000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் விரைந்து 14 ஆயிரம் ரன்களை கடந்த வீரராகவும் விராட் கோலி இருக்கிறார். சுமார் 8000 ரன்களை கடந்து மிகக்குறுகிய காலத்தில் அவர் தற்போது 14000 ரன்களை மூன்றாவது இடத்தில் இருக்கிறார். சச்சின், இலங்கையின் குமார் சங்கரா ஆகியோர் முதல் இரண்டு இடத்தினை தக்க வைத்துள்ளார். 287 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்டு, 14000 ரன்களை விராட் கோலி பதிவு செய்துள்ளார். அதேபோல, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில், இந்திய கிரிக்கெட் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் சாதனை பட்டியலில், விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். 157 கேட்ச்களுடன் விராட் கோலி (Virat Kohli) முதல் இடத்திலும், 156 கேட்ச்களுடன் முகம்மது அசாருதீன் (Mohammad Azharuddin) இரண்டாவது டத்திலும், 140 கேட்ச்களுடன் சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது இடத்திலும், 124 கேட்ச்களுடன் ராகுல் டிராவிட் (Rahul Dravid) நான்காவது இடத்திலும், 102 கேட்ச்களுடன் சுரேஷ் ரைனா (Suresh Raina) ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றனர். அதேபோல, சர்வதேச அளவில் மூன்றாவது இடத்திலும் அதிக கேட்ச்கள் பிடித்த வீரராக விராட் இடம்பெற்றுள்ளார். முதல் இரண்டு இடத்தினை இலங்கையின் மகேந்திர ஜெயவரந்தனே (218), ரிக்கி பாண்டிங் (160) ஆகியோர் தக்க வைத்துள்ளனர்.

257 கேட்ச்கள் பிடித்து விராட் கோலி அபாரம்:

கிங் கோலி என ரசிகர்கள் போற்ற ஒரே கரணம், அவனின் சாதனைகள்:

14 ஆயிரம் ரன்களை விரைந்து கடந்த வீரர்:

287 இன்னிங்சில் 14000 ரன்களை கடந்த விராட் கோலி:

கோலி தன்னை அரசனாக உணர்த்தியுள்ளதாக ஆர்.சி.பி அணி பாராட்டுபதிவு:

14000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்தமைக்கு பிசிசிஐ ட்விட் பதிவு செய்து பாராட்டு: