Rohit Sharma Apologies (Photo Credit: @Cricketracker X)

பிப்ரவரி 20, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025), இரண்டாவது போட்டியில், இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வங்கதேசம் தேசிய கிரிக்கெட் அணி இன்று மோதுகிறது. துபாயில் இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தனது அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறது. 29 ஓவர்களில் 5 விக்கெட் இழந்த வங்கதேச அணி 102 ரன்கள் எடுத்து இருக்கிறது. தொடர்ந்து எஞ்சிய 5 விக்கெட்டுடன் வங்கதேச கிரிக்கெட் அணி களத்தில் இருக்கிறது. Axar Patel: அடுத்தடுத்து 2 விக்கெட் எடுத்த அக்சர் படேல்.. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல்.! 

அக்சரின் ஹாட்ரிக் கனவு ரோஹித்தால் பறிபோன சோகம்:

இந்நிலையில், ஆட்டத்தில் 8 வது ஓவரில் அக்சர் படேல் 8.2 வது ஓவரில் டான்ஜித் ஹாசின் விக்கெட்டையும், 8.3 வது ஓவரில் முஷபிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) விக்கெட்டையும் அடுத்தடுத்து எடுத்த நிலையில், ஹாட்ரிக் விக்கெட்டுக்கு குறிவைக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக ரோஹித் பந்தை பிடிக்க தவறினார். இதனால் அவர் ஒருகணம் ஆவேசமாகி மைதானத்தை இரண்டு முதல் மூன்று முறை ஆத்திரத்தில் தட்டி, பின் எழுந்து அக்சர் படேலிடம் கைகளை கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். இதுகோடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. குழந்தை போல விக்கெட்டை தவறவிட்ட ஆத்திரத்தில் ரோஹித் செயல்பட்டது, பின் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டது கவனத்தை பெற்றது.

விக்கெட்டை தவறவிட்டு மன்னிப்பு கேட்ட ரோஹித் சர்மா:

ரோஹித் விக்கெட்டை தவறவிட்ட காணொளி:

மனம்வருந்தி மன்னிப்பு கேட்ட ரோஹித்:

ரோஹித் விக்கெட்டை தவறவிட்ட அதிர்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்: