மார்ச் 09, வெல்லிங்டன் (Sports News): நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் (Aus Tour NZ) அணி, டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர் ஆகிய ஆட்டங்களில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் நடைபெற்று முடிந்த 3 டி20 ஆட்டத்திலும், சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை புரட்டியெடுத்த ஆஸ்திரேலிய அதிரடிப்படை டி20 போட்டிகள் மூன்றிலும் வெற்றிகொடி நாட்டியது. அதனைத்தொடர்ந்து தற்போது 2 டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றியடைந்த நிலையில், எஞ்சிய இரண்டாவது ஆட்டம் நடைபெற்று அங்குள்ள ஹாஃலே ஓவல் (Hagley Oval) மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணி வீரர்கள் (NZ Vs AUS Team Squad): நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சவுத்தி, டாம் ப்ளூன்டெல், டெவோன் கான்வே, மேட் ஹென்றி, ஸ்காட் குகெலிஜின், டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், நீல் வாக்னர், கேன் யூ வில்லியம்சன் ஆகியோர் விளையாடுகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா ஆகியோர் விளையாடுகின்றனர். Chicken Butter Curry Killed Youth: 27 வயது இளைஞரின் மரணத்திற்கு காரணமான சிக்கன் பட்டர் குழம்பு; அலர்ஜியால் சோகம்.!
ரன்களை குவித்த ஆஸ்திரேலியா: நேற்று தொடங்கிய டெஸ்ட் தொடர் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு திறம்பட இருந்ததால், அதனை எதிர்கொள்ள இயலாமல் நியூசிலாந்து அணியினர் திணறிப்போயினர். மறுமுனையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடித்து ஆட, 68 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்த ஆஸி., அணி 256 ரன்கள் குவித்தது. மார்னஸ் மட்டும் 147 பந்துகளில் 90 ரன்கள் எடுத்திருந்தார்.
பதிலுக்கு பதில் என பந்துவீச்சில் மாஸ் சம்பவம்: பிற வீரர்கள் 30 ரன்களை கிடைக்கவில்லை. ஆஸி அணியின் ரன் குவிப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சு அமைந்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் போட்டியில் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணியின் வீரர்கள், நிதானமாக ஆடி வருகின்றனர். 2.3 ஓவரில் தனது முதல் விக்கெட்டையும் இழந்துள்ளனர். இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றால் டி20, டெஸ்ட் தொடர்களில் எவ்வித தோல்வியும் இன்றி வெற்றிபெற்ற பெருமையை அவர்கள் அடைவார்கள். Rameswaram Cafe Reopened: மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்படட்ட ராமேஸ்வரம் கபே.. பலத்த சோதனைகளுக்கு பின் வாடிக்கையாளர்கள் அனுமதி.!
சூப்பர்மேனாக மாறிய க்ளென்: இந்நிலையில், போட்டியில் 60.2வது ஓவரில் மார்ன்ஸ் தனது 147 வது பந்தை டிம் சவுத்தியிடம் இருந்து எதிர்கொண்டார். பந்து வந்த வேகத்தில் அவர் ஃபோருக்கு முயற்சிக்க, அதனை நியூசிலாந்து அணியின் வீரர் க்ளென் பிலிப்ஸ் சூப்பர்மேன் போல பாய்ந்து பிடித்து விக்கெட் எடுத்தார். க்ளென் அசத்தலாக பாய்ந்து பந்தை பிடித்த காட்சிகள் தற்போது வைரலாகி வரவேற்பை பெற்று வருகின்றன. பந்து பீல்டரின் கையில் மாட்டாமல் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அதனை மாற்றியமைக்கும் வகையில் க்ளென் செயல்பட்டது கவனிக்கப்பட்டு வருகிறது.
SUPERMAN! 🦸 What a catch from Glenn Phillips! Australia are 221/8 at lunch on Day 2 🏏@BLACKCAPS v Australia: 2nd Test | LIVE on DUKE and TVNZ+ pic.twitter.com/Swx84jNFZb
— TVNZ+ (@TVNZ) March 9, 2024