
மார்ச் 15, மும்பை (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி (TATA WPL 2025 Final), இன்று மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Delhi Capitals Vs Mumbai Indians) அணிகள் இடையே நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங் தேர்வு செய்ததால், மும்பை அணி பேட்டிங் செய்தது. மும்பை அணி முதலில் தடுமாறினாலும், பின் போராடி 149 ரன்களை 20 ஓவர்களில் குவித்தது. மும்பை அணியின் முக்கிய பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறி இருந்தனர்.
மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் குவிப்பு:
முதலில் களமிறங்கிய மும்பை அணியின் சார்பில் விளையாடியவர்களில் யஸ்திகா 14 பந்துகளில் 8 ரன்கள், நடாலி 28 பந்துகளில் 30 ரன்கள், ஹர்மன்பிரீத் 44 பந்துகளில் 66 ரன்கள், கமலினி 7 பந்துகளில் 10 ரன்கள், அமஞ்சோத் கவுர் 7 பந்துகளில் 14 ரன்கள் அதிகபட்சமாக அடித்து இருந்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சு, பீல்டிங் போன்றவை திறம்பட இருந்ததால், மும்பை அணி தொடக்கத்தில் ரன்களை குவிக்க இயலாமல், முக்கிய விக்கெட்டை இழந்து திணறும் சூழலுக்கு உள்ளாகியது. பின் ஹர்மன் நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி மறுமுனையில் களமிறங்கியது. Umpire Ankita Guha: அவுட், நாட்-அவுட் சிக்னலை மாற்றி கொடுத்த அம்பயர்.. தவறை சமாளித்த கியூட் ரியாக்சன் வைரல்.!

டெல்லி அணி போராடி மீண்டும் தோல்வி:
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் சார்பில் விளையாடியவர்களில் மெக் லென்னிங் 9 பந்துகளில் 13 ரன்கள், சைபிலி வர்மா 9 பந்துகளில் 4 ரன்கள், ஜேஸ் ஜோனேசன் 15 பந்துகளில் 13 ரன்கள், ஜெமியா ரோட்ரிக்ஸ் 21 பந்துகளில் 30 ரன்கள் அடித்து இருந்தனர். மரிசானே 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். மரிஸான் - நிக்கி நின்று ஆடினாலும், 17.4 வது ஓவரில் விக்கெட் இழந்து வெளியேறினார். மின்னு மணி 1 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார். நிக்கி பிரசாத் 22 பந்துகளில் 24 ரன்கள் என நின்று அடித்து ஆடினர். சரணி 2 பந்துகளில் 3 ரன்கள் அடித்தார். இறுதி 6 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஒரேயொரு விக்கெட் எஞ்சி இருந்தது. நிக்கி, சரணி நின்று ஆடினர். ஆட்டத்தின் முடிவில் டெல்லி அணி 1 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 19.5 ஓவரில் டெல்லி அணி 141 ரன்கள் எடுக்கவே, மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தனர்.
வரலாறு & சாதனை படைத்த மும்பை அணி:
கடந்த 2023 டபிள்யுபிஎல் இறுதிப்போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் மோதிக்கொண்டு, மும்பை அணி வெற்றி அடைந்தது. 2024ல் பெங்களூர் அணி இறுதி போட்டியில் டெல்லியை எதிர்த்து வெற்றி அடைந்தது. 2025 போட்டியில் மீண்டும் டெல்லி - மும்பை அணிகள் மோதிக்கொண்டு, இறுதியில் மும்பை அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. டெல்லி அணியின் பந்துவீச்சு இன்று மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் வாயிலாக பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், மும்பை அணி சாதனை படைத்துள்ளது.
ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை இழந்து தவித்த டெல்லி:
Mumbai Indians are pumped 🆙 and HOW! 🤩
Nat Sciver-Brunt 🤝 Shabnim Ismail ☝️#DC lose both their openers.
Updates ▶ https://t.co/2dFmlnwxVj #TATAWPL | #DCvMI | #Final | @mipaltan pic.twitter.com/1swYQv7KSN
— Women's Premier League (WPL) (@wplt20) March 15, 2025
நடுவர் அங்கிதா அவுட், நாட்-அவுட் சிக்னலை மாற்றிக்கொடுத்து, பின் தனது தவறை உணர்ந்து, முக பாவனையால் அதனை சமாளித்த கிளிக்:
📸 Oops Moment! 😄😂
Umpire Ankita with an adorable reaction after making a wrong signal! 🤦♀️🏏 Even the best have their fun moments on the field! This smile says it all—cricket is all about passion and joy! 💙🔥
Tag your friends who’d love this moment! 😆 #WPL #UmpireAnkita pic.twitter.com/XpxAUlvUO8
— Cricopinion (@Cricopinion247) March 15, 2025
சாரணி - கமலினி இடையே போட்டி:
𝙄. 𝘾. 𝙔. 𝙈. 𝙄
18.1: ☄
18.4: ☝
N.Charani 🆚 G.Kamalini
Enjoy a captivating battle between two youngsters 🔥
Scorecard ▶ https://t.co/2dFmlnw05L #TATAWPL | #DCvMI | #Final pic.twitter.com/DTH4TRmgvV
— Women's Premier League (WPL) (@wplt20) March 15, 2025
ஹர்மன்பிரீத் அதிரடி ஆட்டம்:
𝙎𝙈𝘼𝘾𝙆𝙀𝘿 💥
Harmanpreet Kaur sends that way back into the crowd 🙌#MI will need plenty more of those 🤞
Updates ▶ https://t.co/2dFmlnwxVj #TATAWPL | #DCvMI | #Final pic.twitter.com/PkONDkq05Q
— Women's Premier League (WPL) (@wplt20) March 15, 2025
மரிஸான் விக்கெட் காலி:
Marizanne Kapp breaking the shackles 🔥#DC need 35 from 24 ‼
Folks, did anyone say the edge of the seat Finale 😉
Updates ▶ https://t.co/2dFmlnwxVj #TATAWPL | #DCvMI | #Final | @DelhiCapitals pic.twitter.com/d49UqZU8qi
— Women's Premier League (WPL) (@wplt20) March 15, 2025
தோல்வி தரும் வலி:
Emotions! 😊🥺
Updates ▶ https://t.co/2dFmlnwxVj #TATAWPL | #DCvMI | #Final pic.twitter.com/4XRPVeQQzZ
— Women's Premier League (WPL) (@wplt20) March 15, 2025