Umpire Ankita Guha (Photo Credit: @Cricopinion247 X)

மார்ச் 15, மும்பை (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி (TATA WPL 2025 Final), இன்று மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Delhi Capitals Vs Mumbai Indians) அணிகள் இடையே நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங் தேர்வு செய்ததால், மும்பை அணி பேட்டிங் செய்தது. மும்பை அணி முதலில் தடுமாறினாலும், பின் போராடி 149 ரன்களை 20 ஓவர்களில் குவித்தது. மும்பை அணியின் முக்கிய பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறி இருந்தனர். DC Vs MI WPL 2025: பெண்கள் பிரீமியர் 2025: டெல்லி Vs மும்பை.. டாஸ் வென்று டெல்லி பௌலிங்.! 

கவனத்தை பெற்ற அம்பயரின் செயல்:

இந்நிலையில், போட்டியின்போது நடுவராக அங்கிதா (Umpire Ankita Guha) இருந்தார். மும்பை அணியின் பேட்டிங் பகுதியில், சஞ்சனாவுடைய எல்.பி.டபிள்யு விக்கெட்டுக்கு ரிவியூ எடுத்தபோது, திரை நடுவர் விருந்தா ரதி விக்கெட் கொடுத்தார். மைதானத்தில் இருந்த நடுவர் அங்கீதாவும் விக்கெட் கொடுத்திருந்த நிலையில், மும்பை அதனை ரிவியூ முறை எடுத்து இருந்தது. திரை நடுவர் பார்த்துவிட்டு விக்கெட் கொடுத்தபோது, அவர் தவறுதலாக நாட்-அவுட் சிக்னல் கொடுத்தார். உடனடியாக திரை நடுவர் நாட் அவுட் சிக்னல் கொடுங்கள் என்று கூறவே, அங்கிதா தனது தவறை உணர்ந்து சிக்னலை அவுட் என கொடுத்தார். அப்போது, நடுவர் அங்கிதா கொடுத்த ரியாக்சன் தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடுவர் அங்கிதா தனது தவறை உணர்ந்து, முக பாவனையை மாற்றிய கிளிக்: