WPL 2025 Final: DC Vs MI (Photo Credit: @WPLT20 X)

மார்ச் 15, மும்பை (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இறுதிப்போட்டி இன்று டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் (Delhi Capitals Vs Mumbai Indians WPL 2025) இடையே, மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பௌலிங் தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி டபிள்யூபிஎல் 2025 மகுடம் சூடும். தொடர்ந்து மூன்றாவது முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த டெல்லி மற்றும் ஒருமுறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற மும்பை அணி என இரண்டாவது முறை வெற்றி அடையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Virat Kohli: "ஈ சாலா கப் நம்தே" - ஆர்சிபி அணியில் இணைந்த விராட் கோலி.. வீடியோ இதோ.! 

டெல்லி - மும்பை பெண்கள் அணிகள் மோதல் (Delhi Vs Mumbai Women's WPL 2025):

இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் சார்பில் ப்ளேயிங் லெவன் - மெக் லானிங், ஷஃபாலி வர்மா, ஜெஸ் ஜோனாசென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அன்னாபெல் சதர்லேண்ட், மரிசான் காப், சாரா பிரைஸ், நிகி பிரசாத், ஷிகா பாண்டே ஆகியோர் விளையாடுகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ், நடாலி ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர், சஜானா எஸ், அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், கமலினி ஜி, சமஸ்கிருதி குப்தா, சப்னிம்வர்ஸ் இஸ்மாயில் ஆகியோர் விளையாடுகின்றனர்.

மும்பை அணி பேட்டிங் செய்கிறது: