
மார்ச் 09, குடியாத்தம் (Gudiyatham News): வேலூர் (Vellore) மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், பரவக்கல் கிராமத்தில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவர் தனது குடும்பத்தினருடன் கன்னிக்கோவிலுக்கு சென்றுள்ளார். 6 ஆண்கள், 6 பெண்கள் என 12 க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சென்று இருந்தனர். அங்கு கோவிலில் பொங்கல் வைத்து, ஊதுபத்தி கொளுத்தி வழிபடு செய்யப்பட்டுள்ளது. அப்போது, மரத்தின் மீது இருந்த தேனீக்கள் ஊதுபத்தி புகையால் கலைந்துள்ளது. இதனால் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திக்கொண்டு இருந்தவர்கள் மீது தேனீக்கள் கொட்டியது. உடைந்த நிலையில் வெளியே தொங்கிய கதவு.. ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட அரசுப்பேருந்து..!
ஒருவர் பலி., 12 பேர் படுகாயம்:
இந்த சம்பவத்தில் கோவிலுக்கு சென்று இருந்தவர்கள் அனைவரும் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். மருத்துவமனையில் அனைவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், செந்தில் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.