நவம்பர் 27, Thiruvananthapuram (Sports News): 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 போட்டியில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, தற்போது 5 டி20 தொடர்கள் ஆட்டம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
நேற்று (நவ.26), இரண்டாவது டி20 ஆட்டம் (IND Vs AUS T20I) திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்ட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. இதனால் இந்தியா பேட்டிங் செய்த நிலையில், இந்திய வீரர்களின் அதிரடியால் 20 ஓவர்களில் 225 ரன்கள் குவிக்கப்பட்டது.
ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 53 நாட்கள் அடித்து அசத்தினார். ருத்ராஜ் 43 பந்துகளில் 58 ரன்கள், கிஷான் 32 பந்துகளில் 52 ரன்கள், ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தி இருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்த இந்தியா, 235 ரன்கள் எடுத்திருந்தது. Girl Died Falling Manhole: பாதாள சாக்கடையில் விழுந்து 2 வயது சிறுமி பரிதாப பலி.!
மறுமுனையில் 226 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் அந்த அணி இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது. ஸ்மித் 16 பந்துகளில் 19 ரன்னும், ஷார்ட் 10 பந்துகளில் 19 ரன்னும், மார்க்கஸ் 25 பந்துகளில் 45 ரன்னும், டிம் 22 பந்துகளில் 37 ரன்னும், மேத்யூ 23 பந்துகளில் 47 ரன்னும் அடித்திருந்தார்.
ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் டி20 இரண்டாவது ஆட்டத்திலும் இந்தியா அமோக வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 3 போட்டியிலும் கட்டாயம் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா அணியை இந்தியாவில் இருந்து அனுப்ப வேண்டும் என்ற முடிவில் இந்தியா அதிரடியாக விளையாடுகிறது.
இந்த ஆட்டத்தில் ரிங்கு 9 பந்துகளே ஆடினாலும், நான்கு பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து ஆஸ்திரேலிய அணியை பதறவைத்திருந்தார்.