செப்டம்பர் 27, துபாய் (Sports News Tamil): துபாயில் ஆசியக்கோப்பை 2025 கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், அதன் இறுதிக்கட்டம் நெருங்கி இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், சவுதி அரேபியா, ஓமன் என பல அணிகள் மோதிய ஆட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் (India Vs Pakistan Cricket Match) இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் (Dubai Cricket Stadum) நடைபெறுகிறது.
ஆசியக்கோப்பை 2025 போட்டிகள் (Asia Cup 2025 Cricket Matches):
2025ம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில், குரூப் A மற்றும் குரூப் B பிரிவில் போட்டி நடந்தது. இரண்டு பிரிவிலும் சேர்த்து நடைபெற்ற 3 போட்டியில், இந்திய அணி 3 வெற்றியை தக்கவைத்து இறுதிப்போட்டிக்கு தேர்வானது. இறுதியாக நேற்று (செப் 26) இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியா வெற்றி அடைந்தது. இலங்கை அணி தீராத கடும் முயற்சியுடன் போராடி ஆட்டத்தை சமநிலை செய்தாலும், சூப்பர் ஓவர் முறையில் இந்தியா வெற்றியை உறுதி செய்தது. இதனால் இந்தியா எதிர் பாகிஸ்தான் (India Vs Pakistan) அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. IND Vs SL: சமனில் முடிந்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி.., இலங்கை போராடி தோல்வி..!
இந்தியா எதிர் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி (India Vs Pakistan Cricket Match Update):
போட்டி அணிகள்: இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan)
போட்டி இடம்: துபாய் கிரிக்கெட் மைதானம் (Dubai International Cricket Stadium)
போட்டி நாள்: செப்டம்பர் 28, 2025
போட்டி நேரம்: இரவு 08:00 மணி (இந்திய நேரப்படி)
டாஸ் நேரம்: இரவு 07:30 மணி (இந்திய நேரப்படி)
வானிலை: மழைக்கு வாய்ப்பு இல்லை, அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும்
நேரலை: சோனி லைவ் (Sony Liv App), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி (Star Sports Televisions)
இந்தியா Vs பாகிஸ்தான் அணி வீரர்கள் விபரம் (India - Pakistan Playing Squad Update):
இந்திய தேசிய கிரிக்கெட் அணி (Indian Cricket Team Squad): அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (C), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், ஹர்ஷித்னா சிங், ஹர்ஷித்னா சிங்.
பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Pakistan Cricket Team Squad): சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், ஃபகார் ஜமான், சல்மான் அகா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமது, ஹுசைன் தலாத், ஹசன் அலி, ஜே ஹரிஷ், கே. சல்மான் மிர்சா.