செப்டம்பர் 13, புதுடெல்லி (Cricket News): இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உட்பட 8 நாடுகள் போட்டியிடும் ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) போட்டிகள் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. மொத்தமாக 8 அணிகள் 19 போட்டிகளில் மோதிக்கொள்கின்றன. 2025ம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பை போட்டிகள் துபாயில் வைத்து நடைபெறுகிறது. செப்டம்பர் 28ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரலையில் பார்க்கலாம். இதுவரை 4 போட்டிகள் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், இன்று நடைபெறும் 5 வது போட்டியில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் வெற்றி அடைந்துள்ளன. அந்த வகையில், நாளை (செப்டம்பர் 14) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக்கோப்பையின் 6 வது ஆட்டம் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த தாக்குதலுக்குப்பின், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராஜாங்க உறவுகள் மிகப்பெரிய கேள்விக்குறியை சந்தித்தது. சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமரை கண்டுகொள்ளாமல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் உரையாடி சென்றார். இதனால் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. ரசிகர்களும் இப்போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். BAN Vs SL: வங்கதேசம் - இலங்கை 5வது லீக் மேட்ச்.. நாளை பலப்பரீட்சை..!
போட்டி விபரம்:
போட்டி நாள்: 14 செப்டம்பர் 2025
போட்டி நேரம்: இந்திய நேரப்படி இரவு 08:00 மணி
போட்டி முறை: டி20 இன்டர்நெஷ்னல்
போட்டி இடம்: துபாய் சர்வதேச மைதானம்
போட்டி நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி லைவ், டிடி ஸ்போர்ட்ஸ்
போட்டியிடும் அணிகள்: இந்திய தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல் (India Vs Pakistan Asia Cup 2025 Match):
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில், சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் ஆட்டம் அணிக்கு புதிய உத்வேகம், நம்பிக்கையை அளித்துள்ளது. ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஷதாப் கான் ஆகியோரும் பந்துவீச்சில் திறம்பட செயல்படுபவர்கள். ஆசிய கோப்பை வரலாற்றை பொறுத்தவரையில், இதுவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 19 போட்டிகளில் மோதி 10 போட்டிகளில் இந்தியாவும், 6ல் பாகிஸ்தானும் வெற்றி அடைந்துள்ளன. டி20ல் 13 போட்டிகளில் மோதி இந்தியா 10 வெற்றிகள் பெற்றுள்ளது. ஒருநாளில் 135 போட்டியில் மோதியுள்ள அணிகளில் பாகிஸ்தான் 73 வெற்றிகள் பெற்றுள்ளது. துபாய் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்பதால், பாகிஸ்தான் அணி பௌலிங்கில் திறமையை காட்ட முடிவெடுத்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, அபிஷேக் சர்மா, சூரியகுமார் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகிய தூண்கள் இருக்கின்றன. இதனால் போட்டி சூடுபிடிக்கும். துபாயில் நாளை வெப்பம் அதிகம் சுட்டெரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவில் போட்டி தொடங்குவது வீரர்களின் திறனை பாதுகாக்க உதவும்.
ஆசிய கோப்பை 2025: இந்திய அணி வீரர்கள் விபரம் (Team India Squad Against Pakistan Asia Cup 2025)
சூர்யகுமார் யாதவ் (சி), அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ரின்கு சிங்.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் அணி வீரர்கள் விபரம்
சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகார் ஜமன், சல்மான் ஆகா (சி), ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது, முகமது வாசிம் ஜூனியர், ஹசன் அலி, ஹுசைன் தலாத், ஹுசைன் தலாத், ஹுசைன் தலாத் முகீம்.